Namakkal

News January 6, 2025

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 435 மனுகள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 435 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News January 6, 2025

அரசு பயிற்சி டாக்டர் தற்கொலை

image

நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊசி மூலம் மருந்து செலுத்தி டாக்டர் சந்தான கோபாலன் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலுக்கும் தெரியவில்லை. அவரின் உடலை மீட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2025

மாணவர்களுக்கு பாராட்டு சான்று பரிசுத்தொகை வழங்கல்

image

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் இன்று 6ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட அண்ணா மிதிவண்டி போட்டி மற்றும் அண்ணா மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுத்தொகை பாராட்டு சான்று வழங்கப்பட்டது. இதில் ஆட்சியர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News January 6, 2025

முத்தங்கில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி திங்கள்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30மணிக்கு பஞ்சாமிருதம் பால் தயிர் மஞ்சள் சந்தனம் சொர்ணம் என அபிஷேக ம் பின்அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

News January 6, 2025

நாமக்கல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை 9.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிடப்பட்டது.

News January 6, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தாமரை மாலை தரிசனம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற18 அடியில் ஒரே கல்லால் ஆனா ஆஞ்சநேயருக்கு இன்று பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு பிடித்த தாமரை மாலை சாத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமியை காண ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்.

News January 6, 2025

யோகாவில் உலக சாதனை

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அரவிந்த் யோகா மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 21 மாணவ மாணவியர் யோகா உலக சாதனை செய்து அசத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் அமைப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். மேலும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், முன்னாள் அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன் போட்டிகளை துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

News January 6, 2025

நாமக்கல்லில் முட்டை விலை 50 காசுகள் சரிவு

image

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக குறைந்தது. மேலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் அதிரடியாக 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News January 6, 2025

ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, சாலப்பாளையம், அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், மக்ரூட், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன.அசம்பாவிதம் நிகழாதவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கால்நடைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் செய்திருக்க வேண்டும் என ஆட்சியர் உமா அறிவுறுத்தியுள்ளார்.

News January 6, 2025

புதிய சிபிஎம் மாநில செயலாளருக்கு வாழ்த்து

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு ராசிபுரம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!