India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லை சேர்ந்த அனுபிரசாத் என்பவர், கடந்த 2007ல் IOB வங்கியில் ரூ.2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணம் செலுத்த முடியாததால், கோர்ட் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால், இன்னும் ரூ.7 லட்சம் கட்ட வேண்டும் என தனியார் ஏஜென்சி மூலம் வங்கி மிரட்டல் விடுத்துள்ளது. அதனால், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டை அவர் நாட, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க IOBக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்செங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி பாசறை கூட்டம் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் அன்பு தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு திராவிட இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30 மணிக்கு பஞ்சாமிருதம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் என அபிஷேகம் பின் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
2024-2025ஆம் ஆண்டிற்கான திருநங்கை விருது திருநங்கையர் தினமான ஏப்.15ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே வரவேற்கப்படுகிறது.கடைசி நாள் பிப்.10..விதிமுறை; அரசின் உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும், நலவாரியத்தில் உறுப்பினராக இருக்ககூடாது.
ஸ்டொலைட் ஆலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,1000-த்திற்கும் மேற்பட்ட லாரிகள் போதிய வருவாயின்றி இயக்கப்பட்டு வருவதாகவும், சுமார் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஆலையைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2024-2025ஆம் ஆண்டிற்கான திருநங்கை விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ல் வழங்கப்பட உள்ளது.நாமக்கல் மாவட்டத்தைச்சார்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே வரவேற்கப்படுகிறது.கடைசி நாள் 10.02.2025.விதிமுறை; அரசின் உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்,நலவாரியத்தில் உறுப்பினராக இருக்ககூடாது.
நாளை 07-01-2025 காலை 10.00 மணியளவில் திமுக தலைமை கழகப் அறிவிப்பிற்கு இணங்க தமிழ்நாட்டின் தமிழ் தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள BSNL தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் கொல்லிமலை ஒன்றிய கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (06/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9894167158), ராசிபுரம் – கோமலவள்ளி (7548826260), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு வாகனத்திற்கு பத்து ரூபாய் விதம் வசூல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக திடீரென கட்டணம் அதிகப்படுத்தியது. ஆனால் அந்த கட்டண ரசீதில் எந்தவித கட்டணம் இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி வாகனம் நிறுத்த ரூ15 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முட்டை விலை உயர்த்த வேண்டும் என கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற மண்டலத்திலும் மார்கழி மாதம் நடைபெறும் காரணத்தால் முட்டை நுகர்வோர் குறைவாக இருக்கும் காரணத்தால் முட்டை விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டை 4.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.