India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025-2026ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.25 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகர மையத்தில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் வணங்கி நின்றவாறு ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். மார்கழி 25ஆம் தேதி ஏகாதேசி எனும் சொர்க்கவாசல் திறப்பு நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலையில் நடைபெற்றது. அங்கு தரிசனம் முடித்த பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராசிபுரம் அடுத்துள்ள சிங்கிலிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 8 கிராமங்களில் பொங்கல் விழா பல வருடமாக கொண்டாடப்படுவதில்லை. இதற்கு அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 57 ஆண்டுகளுக்கு முன் பொங்கல் விழாவை கொண்டாடியதால் அப்பகுதி கால்நடைகளை அம்மை நோய் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கால்நடைகள் நலமுடன் வாழ அன்றிலிருந்து இன்று வரை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என தெரிவித்தனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 9ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது, மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (09/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று 9.1.25 திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், கூட்டப்பள்ளி ஏரி அருகில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் ஜனவரி 10ல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம். இதை அடுத்து 15 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ல் அதிகாலை 05 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்யப்படும் கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி வியாழக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30மணிக்கு பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
பிலிக்கல்பாளையம் பகுதிகளில் வெல்லம் காய்ச்சும் ஆலைகள், வெல்ல ஏல சந்தையில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் (ம) குழுவினா் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, வெல்ல ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 10,900 கிலோ அஸ்கா சக்கரையை பறிமுதல் செய்தனா். மேலும், கலப்பட செய்யப்பட்ட 26,430 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராசிபுரம் வட்டத்திற்கு அடுத்துள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மணியம்பட்டி வழியாக தண்ணீர் திருமணிமுத்தாற்றில் செல்கின்றது. திருமணிமுத்தாற்றில் சாயக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் கருப்பு நிறத்துடன் மற்றும் நுரையுடன் நீர் செல்கின்றது. திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதால் பல ஆயிரம் மீன்கள் செத்து மிதக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.