Nagapattinam

News October 21, 2024

கீழ்வேளூரில் 330 லிட்டர் சாராயம் பறிமுதல்

image

கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகேந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆழியூர் கடைத்தெரு, கோவில் கடம்பனூர் சன்னதி தெரு, புதுச்சேரி மயான கொட்டகை ஆகிய இடங்களில் சாராயம் விற்று கொண்டிருந்த கந்தன், மகாதேவன், சிவா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

News October 21, 2024

தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம்

image

தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை கோவை திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு புதியதாக 14,160 பேருந்துகள் இயக்க உள்ளது. அதில் சராசரியாக நாகை -வேளாங்கண்ணி வரை செல்லும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

News October 21, 2024

ஆவாரணி புதுச்சேரியில் மிக கனமழை

image

நாகப்பட்டினம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் ஆவாரணி புதுச்சேரியில் மட்டும் மழை இல்லை என்று விவசாயிகள் வருத்தப்பட்டு வந்தனர் அந்த வருத்தத்தை போக்கும் வகையில் இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது தற்பொழுது மிக கனமழை பெய்து வருகின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

News October 21, 2024

விமானம் மூலம் அந்தமானுக்கு பறக்கும் கல்நண்டு

image

வேதாரண்யம் வட்டம் கோடியக்கரை மீனவர்கள் வளையில் 3 கிலோ எடை கொண்ட கல்நண்டு சிக்கியது.  மீனவர்கள் கல்நண்டை சோதனை செய்ததில் நண்டின் பின்பகுதியில் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.  பின்னர், மீனவர்கள் பிடித்த கல்நண்டு குஞ்சி பொரிப்பதற்காக தற்போது அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.   வென்டிலேட்டர் வசதியுடன் விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

News October 21, 2024

நாகை அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

image

நாகை மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, புதுச்சேரி, கோவில் கடம்பனூர், கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கந்தன் (47), மகாதேவன் (35), சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News October 20, 2024

நாகூரில் வித்தியாசமான திமுக சுவர் விளம்பரம்

image

தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் உள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகூரில் பிரதான சாலையில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தில் 2k கிட்ஸின் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் என வித்தியாசமாக கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News October 20, 2024

நாகை மாவட்டம் பற்றிய முக்கிய தகவல்கள்

image

நாகை மாவட்டம், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி, 1991-ஆம் ஆண்டு தஞ்சையிலிருந்து இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 4 தாலுகாவை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் மொத்தம் 236 வருவாய் கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 18 லட்சம் ஆகும். இதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். நாகை மாவட்டம் என்றால் உங்கள் ஞாபகத்திற்கு வருவது என்ன? SHARE NOW!

News October 20, 2024

நாகை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2024

விளையாட்டு துறையினருக்கு விருது

image

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெறுவதற்கு நாகை மாவட்டத்தை சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நடுவர்கள் வருகின்ற 21-ஆம் தேதிக்குள், செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரியமேடு, சென்னை என்ற முகவரியில் விண்ணப்பித்திட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார். 

News October 19, 2024

கீழ்வேளூர் மாணவன் மாநிலத்தில் முதலிடம்

image

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளி கழகம் சார்பில் மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.இதில் பங்கு பெற்ற மாணவர்களில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அத்திப் புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் யோகேஸ்வரன் கட்டுரை போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்.

error: Content is protected !!