Nagapattinam

News October 23, 2024

நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.

News October 23, 2024

நாகை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

டானா என பெயரிடப்பட்டுள்ள புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, 24ஆம் தேதி இரவு மற்றும் 25ஆம் தேதி காலை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News October 23, 2024

அயோடின் உப்பில் சேர்க்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை

image

அயோடின் குறைபாட்டால் தைராய்டு, அறிவு குறைவு, மனக்கோளாறு, கருச்சிதைவு போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே உப்பு விற்பனை செய்பவர்கள் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அயோடின் இல்லாத உப்பு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.

News October 23, 2024

முதலமைச்சர் விளையாட்டு விருது பெற கால நீட்டிப்பு

image

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  நவம்பர் 11 கடைசி தேதி ஆகும். எனவே தகுதியான விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு நடுவர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று தெரிவித்துள்ளார். SHAREIT

News October 23, 2024

நாகையில் கல்வி – தொழில் நிறுவனங்களுக்கான கடன் முகாம்

image

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (24.10.24) காலை 11 மணியளவில் கடன் வசதி முகாம் மாவட்ட தொழில் மையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் கடன் திட்டங்கள் குறித்து தகவல்கள் அளிக்கப்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு எட்டுக்குடியில் சிறப்பு வழிபாடு

image

ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

News October 22, 2024

நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு

image

வங்கக்கடல் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிதாக உருமாறும் புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொலை தூரத்தில் காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதை குறிக்கும் விதமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News October 22, 2024

நாகை மக்களுக்கு வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 52 கோயில்களில் காலியாகவுள்ள இரவு பாதுகாவலா் பணியிடங்களில் சேர விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள் இதில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்கள் அறிய நாகை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி 04365-299765 மூலம் தொடா்பு கொள்ளலாம்.

News October 21, 2024

ஆற்காட்டு துறை மீனவர்களிடமிருந்து வலை பறிப்பு

image

ஆற்காட்டுத்துறையிலிருந்து ஆறுமுகம் என்பவருடைய படகில் ஆறுமுகம் சிவக்குமார் பரசுராமன் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கோடியக்கரை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெட்டி, பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர். 

News October 21, 2024

நாகை மாவட்ட முன்னாள் ராணுவத்தினருக்கு பணி வாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள 52 திருக்கோவில்களில் இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியில் சேர விருப்பம் உள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!