Nagapattinam

News October 28, 2024

நாகூர் கடற்கரையில் ஆண் பிணம்

image

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள், நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 27, 2024

நாகையில் 335 பேர் ‘ஆப்சென்ட்’

image

நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் T.N.P.S.C யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்த 638 தேர்வர்களில் 335 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை நாகப்பட்டினம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

தீபாவளி: நாகையில் இன்று ரேஷன் கடைகள் செயல்படும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 26, 2024

திட்டச்சேரியில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

image

திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆண்டனி பிரபு ஆகியோர் திட்டச்சேரி அடுத்த மரைக்கான்சாவடி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பாக்கியவதி என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைகளுக்கு சீல் வைத்து கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News October 26, 2024

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் பயன்பெற அழைப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் 2020 முதல் 2033 வரை செயல்படுத்தப்படுகிறது. 2024-25 நிதியாண்டிற்கு ரூ.6 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான பிணையில்லா கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு 3% வட்டி குறைப்பு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

இளம் சாதனையாளர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 65000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கு தேவையான 2074 மெ.டன் யூரியா, 837 மெ.டன் DAP. 271 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பலவேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

விவசாயிகளுக்கு நாகை ஆட்சியர் வேண்டுகோள்

image

நாகை மாவட்டத்தில் 65000 ஹெக்டர் சம்பா சாகுபடி பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் நலன் கருதி தேவையான அளவு யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வரவழைக்கப்பட்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர நிறுவனங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயிகள் உரம் வாங்கும் போது கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு சென்று உரங்கள் வாங்கிட வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News October 25, 2024

தேர்வு மையத்திற்கு வர பலத்த கட்டுப்பாடு

image

நாகையில் நாளை 26ந்தேதி நடைபெறும் TNPSC தேர்வு எழுத வருபவர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மைய அமைவிடத்திற்கு வர வேண்டும். தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, இதர எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அனைத்து பகுதியில் இருந்தும் தேர்வு மையம் வந்திட பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

நாகையில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறும், உச்சநீதிமன்ற ஆணையின்படி தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என ஒதுக்கப்பட்டுள்ள 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!