India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி வரும் 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு வேளாங்கண்ணியில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழு மாநில பேரிடர் மீட்பு குழு கடலோர பாதுகாப்பு குழுமம் வருவாய் மற்றும் தீயணைப்பு துறை காவல் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இது ஒத்திகை என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வடக்குபொய்கை நல்லூர் வீரன்குடி காட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ்(20). இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தலையில் தாக்கியதில் தலை சிதைந்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட நாகை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. SHARE IT.
நாகை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 52 ஆயிரத்து 977 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 63 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 82 ஆயிரத்து 885 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தர்கள் 29 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். SHARE IT.
நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். பட்டா நிலம் உள்ள விவசாயிகள் கணினி சிட்டா அடங்கல், வரைபடம் (எஃப் எம் பி) ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வேளாண்மை பொறியியல் துறையை அணுக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாராண்யம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் இன்று காலை வெளியிட்டார். அதனை அதிமுக சார்பில் நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் ஆகியோர் ஆட்சியரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் கால் நடை சார்ந்த தொழில்களான பால் பதப்படுத்துதல் மதிப்பு கூட்டுதல் இறைச்சி பதப்படுத்துதல். தீவன உற்பத்தி உள்ளிட்ட தொழில் களுக்கு வங்கி கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் நாகை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை, சிக்கல் சிங்காரவேலவர் கோயில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் மாமன்னன் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72 மாடக்கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் 1932, 1961, 1991, 2004 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்டுள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. SHARE IT.
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, புஷ்பவனம், உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஏராளமான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன, இவை கொட்டும் போது உடலில் அரிப்பு ஏற்படும். தற்போது வந்துள்ள ஜெல்லி மீன்கள் சொறி எனும் தன்மை கொண்டவை. இது மனிதர்கள் மீது படும்போது அரிப்பு ஏற்படும். மின்சாரம் தாக்கியது போல் வலி இருக்கும். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
Sorry, no posts matched your criteria.