India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
பெரியகண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 86-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு டெல்டா இயற்கை விவசாயி பிரபு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மணி, சேகல் இயற்கை விவசாயி இளஞ்செழியன் ஆகியோர் நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் வழங்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேதாரண்யம் RDO அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறையாக காவல்துறையினரால் பாதுகாக்கப்படுகிறதா என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். பின் காப்பு அலுவல் புத்தகத்தில் கையெழுப்பமிட்டு பார்வையிட்டார்.
நாகை மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 104 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
நாகை அவுரித்திடலில் சிபிஐ வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு வாக்கு சேகரித்தார். அப்போது அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை ஓசையை கேட்டு
பேச்சை நிறுத்திய அமைச்சர் உதயநிதி, “2 நிமிடம் தொழுகை முடிந்த பின்னர், இது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் ஜாதி, மத, பேதம் எதுவுமின்றி சிறுபான்மையினருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சான்று எனவும் பேசினார்.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி அடுத்த வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் நகராட்சி பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடி மையத்தினை இன்று, பொது தேர்தல் பார்வையாளர் பாரதி லக்பதி நாயக் ஐஏஎஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அரங்கநாதன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
நாகை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இணையும் கலந்தாய்வு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நாகை மேலக்கோட்டை வாசல் வி.பி.என் மகாலில் நடக்கிறது.
எனவே வணிகர்கள், சேவை சங்கத்தினர், பொதுமக்கள் என நாகை மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு சுமார் 50 பேர் ஒரு தனியார் சுற்றுலா பேருந்து மூலம் வந்துள்ளனர். வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் நாகை அருகே உள்ள கருவேலங்கடை பகுதியில் திடீரென பாதி வழியிலேயே பேருந்து பழுதானது. இதனால் அதில் பயணித்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த முனீஸ்வரி என்ற நபர் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை இன்று கள்ள சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவினால், குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.