Nagapattinam

News April 19, 2024

வாக்களித்த நாதக மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ்

image

நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் வாக்களித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி காமேஸ்வரம் வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி நாகப்பட்டினம் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

News April 19, 2024

நாகை: பழுதான வாக்குப்பதிவு இயந்திரம்

image

நாகை டாட்டாநகர் வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் மீனவர்கள் வாக்களிக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வாக்கு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வாக்கு சாவடியில் பதட்டமான சூழலில் நிலவி வருகிறது.

News April 18, 2024

நாகை : மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்த இலகுவாக இலவசமாக அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவையினை “Saksham App” உதவி எண் 1950 கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் மூலமாக தொடர்பு கொண்டு நாகையில் நூறு சதவீத வாக்கு பெற வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 18, 2024

நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

நாகை: 1551 வாக்கு சாவடி மையங்கள் தயார்

image

நாகை மக்களவைத் தொகுதியில் 7,92,848 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 6 சட்டமன்ற தொகுதியிலும், மொத்தம் 1551 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நாகை மாவட்டதில் வாக்குச்சாவடி மையங்களில் 3190 அலுவலர்கள், 59 நுண் பார்வையாளர்கள், 336 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 7500 அரசு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

News April 18, 2024

நாகை: வாகனங்களுக்கு தடை விதித்து உத்தரவு

image

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை அழைத்து வருவதற்கும் பின் அழைத்து செல்வதற்கும் வேட்பாளர்களோ அவரது முகவர்களோ வாகனங்களை பயன்படுத்தினால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜானிடாம் வர்கிஸ் எச்சரித்தள்ளார்.

News April 18, 2024

ஆட்சியர் ஆணையை அமல்படுத்தும் வணிகர்கள்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் ஆணைப்படி நாளை தேர்தல் நாளன்று வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது என்றும் நாமும் நம்மிடம் பணிபுரியும் ஊழியர்களும் ஜனநாயக கடமையை ஆற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்றும் நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

image

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வருகின்ற 21 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. நாகை மாவட்டத்தை சேர்ந்த 2005 செப்டம்பர் 1 ஆம்ட தேதிக்கு பின் பிறந்தவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜூலியஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

image

கீழக்காவலாக்குடியைச் சேர்ந்தவர் அருண்குமார்(26), கூலி தொழிலாளி. நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தேவூர் கடைத்தெருவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தேவூர் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது கீழத்தெருவை சேர்ந்த மூவேந்தன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலே பலியானார்.

News April 18, 2024

திருமருகலில் குளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

image

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஹாஜரா பேகம் தெருவை சேர்ந்தவர் பாவாஷா ஜலாலுதீன் (58). கட்டிட கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஏனங்குடி சத்திரம் குளத்தில் ஓரமாக உள்ள கட்டையில் அமர்ந்துள்ளார். திடீரென மயக்கம் ஏற்பட்டு குளத்தின் உள் தவறி விழுந்துள்ளார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஜலாலுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருகண்ணபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.