India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த 2ஆம் தேதி கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று மதியம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. விடுதலையான மீனவர்கள் 12ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்து, அதன் பின் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை-தமிழகம் நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11, 12, 13 மற்றும் 16-ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உடனே ஷேர் செய்யவும்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான தொண்டாற்றிய தகுதியானவர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு 15.12.2024க்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசு பணியாளர்களின் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்ட பா.ஜ.க தலைவர் மறைந்த கார்த்திகேயனின் படத்திறப்பு விழா நாளை 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு நாகை விபின் ரெசி டென்சில் நடைபெறவுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று படத்தை திறந்து வைத்து பேசுகிறார். இதில் எச்.ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பனைமேட்டை சேர்ந்தவர் பக்கிரிசாமி (53). விவசாய தொழிலாளி வேலைக்கு சென்று விட்டு நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பனைமேடு வெற்றிலைபட்டி குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. கார் மோதியதில் பலத்த காயமடைந்த பக்கிரிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற இப்போது வழியிலேயே உயிரிழந்தார்.
நாகை மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்ய முதல்வர் மருந்தகம் அமைக்க டிசம்பர் 10 ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் <
திருக்குவளை தாசில்தாராக கிரிஜா தேவி, வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலரின் பி.ஏ. ஆக சுதர்சன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக ஜெயசீலன், அரசு கேபிள் டி.வி தாசில்தாராக ஸ்ரீதேவி, கீழ்வேளூர் வட்ட அலுவலக தனி தாசில்தாராக ராஜசேகரன், கீழ்வேளூர் தாசில்தாராக கவிதாஸ், வேதாரண்யம் தாசில்தாராக சக்கரவர்த்தி, சி.பி.சி.எல் தாசில்தாராக ராஜ்குமார் ஆகியோரை ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு/குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்தில் நீர் பாசன கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் விவசாயிகள் பயன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் நேற்று தெரிவித்துள்ளார்.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25இன் கீழ் நாகை மாவட்ட விவசாயிகளுக்கு மாற்று பயிராக பயறு வகை, சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம், துத்தநாக சல்பேட்டுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது. எனவே பயன்பெற விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.