India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சுமார் 6 லட்சம் ஹெக்டர் பரப்பளவு நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நிவாரணம் குறித்து ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த வரும் அடுத்த மாதம் ஜன.15-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பகுதி வயல்கள் எப்படி உள்ளது? கமெண்டில் தெரிவிக்கவும்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் வருகின்ற டிச.26-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் மின்சார மோட்டார்களை கைப்பேசியால் இயக்கும் கட்டுப்பாட்டு கருவி மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி சரபோஜி ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 30) இவர் அதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் கவியரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது பழைய மின் மோட்டாரை மாற்றி அதிக திறன் கொண்ட புதிய மின் மோட்டார் பொருத்தி கொள்ள 50% மானியம் அல்லது ரூ.15000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, நாகப்பட்டினம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் தகடூர் அருகே செங்காத்தலை பாலம் அருகில் செட்டிகுளம் பச்சையங்காடு பகுதியே சேர்ந்த மூதாட்டி அரசு பேருந்தில் பயணித்துள்ளார் இவர் படிக்கட்டில் தவறி கீழே விழுந்து அரசு பேருந்து டயர் தலையில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் இணைந்து வந்து உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
நாகை வடக்கு பால் பண்ணைச்சேரியை சேர்ந்தவர் திருநங்கை ரஃபியா 2018 முதல் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், நேற்று டெல்லியில் ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட 15 நாடுகள் பங்கேற்ற திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், மிஸ் யுனிவர்ஸ் ட்ரான்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் தர்ம கோவில் தெருவில் உள்ளது. இது நீண்ட காலமாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து இந்து சமய துறை இணை ஆணையர் குமரேசன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் ராணி மேற்பார்வையில் மேற்கண்ட இடம் மீட்கப்பட்டு கோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. SHARE செய்யவும்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, தமிழக அரசு சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் டிசம்பர் 26, 27 தேதிகளில் காலை 10.30 மணிக்கு நாகை மாவட்ட நூலகத்தில் நடக்கிறது. விவரங்களுக்கு 9791931179 தொடர்பு கொண்டு 22ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய நாகை ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
நரிமணம் அருகே பனங்குடி CPCL நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் பலவித பேச்சுவார்த்தை போராட்டம் என்று நடத்தியும் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே இன்று 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுடன் இணைந்து நில நிர்வாக ஆணையருக்கு பதிவு அஞ்சல் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.