Nagapattinam

News December 23, 2024

301 மனுக்களுக்கு நடவடிக்கை ஆட்சியர் உத்தரவு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொது மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 301 மனுக்களை பெற்ற ஆட்சியர் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

News December 23, 2024

நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலை உருவாக்கி உள்ளதை குறிக்கும் வகையில் இந்தப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2024

  இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்

image

கோடியக்கரையில் இருந்து பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் ஆலிவர் அட்லி ஆமை இறந்து கரை ஒதுங்குகின்றன. ஆமைகளானது கடல் பிறப்பிலிருந்து நிலப்பரப்பிற்கு முட்டையிடும் வரும் வேளையில் படகுகளின் சிக்கி இறப்பதாகவும் கூறுகின்றனர். கடற்கரை ஓரங்களில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து ஒதுங்கிக் கிடக்கின்றன.

News December 22, 2024

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஏராளமான இளைஞர்கள், பல அருட்தந்தையர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடி கொண்டாடினர்.

News December 22, 2024

வேதாரண்யத்தில் சிக்கிய திருட்டு கும்பல்

image

வேதாரண்யம் பகுதியில் ஆடு திருட்டு அதிகளவில் நடைபெற்று வந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் எக்கல் பகுதியில் 3 நபர் ஒரே பைக்கில் 2 ஆடுகளை திருடி கொண்டு வந்தபோது, வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளிக்கிடங்கு பகுதியில் பொதுமக்கள் விரட்டி பிடித்துள்ளனர். உடனடியாக வாய்மேடு காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். திருத்துறைப்பூண்டி போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

News December 21, 2024

நாகை: தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் ‘கலைஞா் கைவினைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற வங்கிக் கடனுதவி மற்றும் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியம் பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு உட்பட்ட கைவினை கலைஞராக இருத்தல் வேண்டும். மேலும் தகவலுக்கு 89255-33970 என்ற எண்ணை தொடரபு கொள்ளலாம்..

News December 20, 2024

நாகை: தேசிய விவசாயிகள் தின கருத்தரங்கு

image

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல் 23ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

நாகை மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து

image

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட கூடிய மாவட்டங்களில் நாகை 4-ஆம் இடத்தில் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள், குறையும் நிலத்தடி நீர் மட்டம் ஆகிய காரணங்களால் வரும்காலங்களில் நாகை மாவட்டத்தில் வெள்ளம், வறட்சி, கடும் வெப்பம், அரிசி உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News December 19, 2024

பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் கவனத்திற்கு

image

பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கான நில ஆவணங்கள், கடவு சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களில் உள்ள கடன் வழங்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் நீக்கி ஒப்படைக்க உள்ளதால், சம்பந்தப்பட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியரின் (பொது) நேர்முக உதவியாளர் பிரிவை அணுகிட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 19, 2024

மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024-2025ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பவர்டில்லர் மற்றும் விசை களை எடுக்கும் கருவி (பவர் வீடா) நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!