India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது நிரம்பிய பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு நெடுந்தூர ஓட்ட பந்தய போட்டி ஜனவரி 5 ஆம் தேதி நாகூர் மீன் வள பொறியியல் கல்லூரியில் துவங்கி கங்களாஞ்சேரி சாலையில் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அணுகிட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டத்தில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இனி நான் செருப்பு அணிய மாட்டேன் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கூறியதை அடுத்து, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் நிஜந்தன் இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலை செருப்பு அணியும் வரை அவரும் செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளார்.
வேதாரண்யம் அருகே செம்போடை வடக்கு கடை தெருவில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த அவரை மக்கள் உடனடியாக மீட்டு வேதாரணியம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரணியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் டிசம்பர் 28ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சவுதி அரபியாவில் ஓட்டுனர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடைபெறுவதாகவும், இந்த மூலம் தகுதி பெறும் நபர்கள் சவுதி செல்ல கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. எனவே இந்த வாய்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தவறான செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது. செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் இருபதாம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று மலர் வளையம் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெண்மணி தியாகி நினைவு நாளான இன்று டெல்டாவின் வருகை ஒற்றுமை என்ற பெயரில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் இயக்கமாக வெண்மணி தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கலந்து கொண்டு வெண்மணி தியாகிகளின் நினைவு போற்றும் வகையில் உரையாற்றினார்.
நாகை வெளிப்பாளையத்தில் நாளை டிசம்பர் 26ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டு தொடக்க விழா, சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்த தினம் மற்றும் தொழிற்சங்க போராளி தோழர் K.T.K. தங்கமணி ஆகியோரின் நினைவு தினத்தினை ஒட்டி கொடியேற்ற விழா, ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.
1968-ம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ‘அரை படி’ நெல்லை கூலி உயர்வாக கேட்டதால், கோபாலகிருஷ்ண நாயுடு என்பவரால் 44 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அணையா நெருப்பாகவே இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் இன்றுடன் 56 ஆண்டுகளை கடந்துவிட்டன. இருப்பினும், அதன் அனலும் சாம்பலும் மனித குலத்தை நேசிக்கும் ஒவ்வொரு நெஞ்சிலும் தனலாய் தகிக்கவே செய்கிறது.
தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் நாகப்பட்டினம் கோட்டைவாசல்படி மற்றும் புத்தூரில் திராவிடர் கழக மாவட்டததலைவர் நெப்போலியன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.