India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 104 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 15 ந்தேதி திருநங்கையர் முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும் இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகிட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
திருப்பூண்டி மூலக்கடை பகுதியில் சுமார் 65 வயதுள்ள பெண் ஒருவர் நேற்று தலையில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார் என தெரியவில்லை இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சன்னியாசி பனங்குடி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் மகள் துளசிகா (வயது 22). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பயின்று வருகின்றார்.கடந்த 1-ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு நான் தூங்க போகிறேன் என்று கூறி விட்டு அறையின் கதவினை பூட்டி கொண்டார். காலை துளசிகா தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்டிகை காலங்களில் மற்ற பொருட்களை விட டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு அன்று நாகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 கோடியே 32 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பல்வேறு வகையான மதுபாட்டில்கள் விற்பனை ஆகி இருப்பதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நல்ல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரளா மாநில பதிவு எண் கொண்ட சொகுசு பேருந்து ஒன்று வேளாங்கண்ணிக்கு வந்துவிட்டு நேற்றிரவு அதிவேகத்தில் திருத்துறைப்பூண்டி ஈசிஆர் சாலையில் சென்றது. அதனை கண்ட டிராபிக் போலீசார் பேருந்தை விரட்டிச் சென்று அதற்கு அபராதம் விதித்தனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4ஆம் தேதி நடைபெறும் சைக்கிள் ஒட்டும் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது விண்ணப்ப படிவங்களை dsonagai@gmail.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலோ நாளை (ஜன.3) தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் மாதேஷ் ( 15). இவர், நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாதேஷ் தனது வீட்டில் இருந்த சீரியல் லைட்டை அவிழ்த்த போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தலைஞாயிறு அருகே மணக்குடியில் கணேசன் என்பவர் அடகு கடையுடன் இணைந்த நகை கடை வைத்துள்ளார். நேற்று இவர் கடை திறக்க வந்த போது கடையின் பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த 50 கிலோ வெள்ளி பொருட்கள் தங்க நகை என ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டது. பின்னர் கூடுதல் பயணிகள் செல்லும் வசதி, கட்டண சலுகை ஆகியவற்றுடன் நாளை 2 ஆம் தேதி முதல் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடல் தட்ப வெப்ப சூழ்நிலையால் இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.