India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வை.செல்வராஜ். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது திமுக மாவட்டச் செயலாளர்கள் பூண்டி கலைவாணன், கௌதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் பிரதி மாதம் 2வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனைகளிலும், 2 வது வெள்ளிக்கிழமைகளில் வேதாரண்யம் சுற்று வட்டாரங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் நடைபெறும் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு, புகைப்படம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாகை உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களில் நான் முதல்வன் திட்டம் மிக முக்கியமானது. இந்த திட்டம் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிப்பதாகும். அந்தவகையில், நாகை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 34,506 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகள் என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, சாதனை படைத்தது. இந்த வெற்றியை தனது தந்தை பிறந்த இல்லத்திலுள்ள அவரது மார்பளவு வெண்கல சிலை முன்பாக சமர்ப்பிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் திருக்குவளை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வரின் பயணத் தேதி இன்னும் உறுதியாக திட்டமிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
*சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் – 4,65,044 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஜி.கர்சித் சங்கர்- 2,56,087 வாக்குகள்
*நாதக வேட்பாளர் மு.கார்த்திகா – 1,31,294 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் ரமேஷ் – 1,02,173 வாக்குகள்
2024 மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி சிபிஐ. வேட்பாளர் செல்வராஜ் 4,50,938 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர் 2,47,216 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார். வெற்றி வாகை சூடிய வேட்பாளர் செல்வராஜூக்கு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்பொழுது 17வது சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதில் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் 402542, அதிமுக சுர்ஜித் சங்கர் 223206, நாம் தமிழர் கார்த்திகா 116165, பாஜக ரமேஷ் கோவிந்த் 89864 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்குகள் அடிப்படையில் முதலிடத்தில் சிபிஐ, 2வது இடத்தில் அதிமுக, 3வது இடத்தில் நாதக உள்ளது.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான 9,67,031 வாக்குகள் எண்ணப்பட்டு 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. வாக்கு இயந்திரம் பழுது காரணமாக 1524 ஓட்டுகள் மட்டும் எண்ணப்படாமல் உள்ளது. நாகை சட்டமன்ற தொகுதியில் 38,39 நம்பர் வாக்கு இயந்திரம் பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை முடிவு பெறாமல் உள்ளது.
Sorry, no posts matched your criteria.