Nagapattinam

News January 14, 2025

நாகை மக்களே நீங்கள் ரெடியா?

image

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வாழக்கரையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 28 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் அதன் பரிசளிப்பு பொதுக்கூட்டம் ஜனவரி 16 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஓட்டப்போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுடன் நடைபெறும் இந்த போட்டியில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று மாலை பரிசளிப்பு விழா & பொதுக்கூட்டம் நடக்கிறது.

News January 14, 2025

முதலமைச்சருக்கு திமுக நிர்வாகி வாழ்த்து

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் மரிய சார்லஸ் இன்று சென்னையில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை மற்றும் வேஷ்டி வழங்கி தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு தமிழக முதல்வர் 100 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கினார்.

News January 14, 2025

சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் காணும் பொங்கல் கோலம் போட்டி

image

காணும் பொங்கலை முன்னிட்டு சிக்கல் மகாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா பொங்கல் கோலம் போட்டி வரும் 16ஆம் தேதி காணும் பொங்கல் அன்று அருள்மிகு சிக்கல் சிங்காரவேலவர் ஆலய வளாகத்தில் மாலை 1மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மகளிர்கள் கலந்து பரிசினைத் தட்டிச் செல்ல சிக்கல் மகாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 14, 2025

மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பொங்கல் வாழ்த்து

image

பசுமை பொங்கும் வயல்வெளிகள் பனித்துளிகளை இலைகளில் ஏந்தியவாறு சிரிக்கும் தாவரங்கள்தங்களையும் மகிழ்விக்கிறார்கள். பெருமிதத்தில் தலை உயர்த்தி நிற்கும் கால்நடைகள் இதமான குளிரும், மிதமான வெயிலும் கைகுலுக்கும் வானிலை என பொங்கல் திருநாள் இயற்கையின் வசந்தத்தை வாரி அனைத்து நம்மை மகிழ்விக்கிறது. விடுமுறைகளோடு கொண்டாடப்படும் பொங்கல் தினத்திற்கு மஜக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுள்ளது.

News January 14, 2025

வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பொங்கல் விழா

image

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேளாங்கண்ணி பொறுப்பு காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

News January 14, 2025

நாகை ஆட்சியரின் பொங்கல் வாழ்த்து

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், நுரை பொங்க அலையாடும் நாகையில் உலை பொங்க, அனைவருக்கும் வளமை பொங்க செல்வம் பெருக இனிய தமிழர் தை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறி உள்ளார்.

News January 14, 2025

ஒ.எஸ்.மணியன் MLA வின் பொங்கல் வாழ்த்து

image

நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்ட பொதுமக்கள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் சமத்துவமும் சமதர்மமும் பெற்று அனைவரும் அளவில்லா இன்பத்துடன் இனிதே பொங்கலை கொண்டாட வேண்டுமென அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

பொங்கல் வாழ்த்து சொன்ன முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

image

5000 ஆண்டுகளை கடந்து மொழியினம் சார்ந்த, வாழ்வியலை அடிப்படை ஆதாரமாக்கொண்ட திருவிழா பண்பாடு கலாச்சாரம் காத்திடவும், நாடு நலம்பெறவும் நாட்டுமக்கள் வளம் பெறவும் நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மை போக்கிடவும். உழவர்கள் வாழ்வில் மேம்பாடு பெற்றிடவும் இந்நாளில் வாழ்த்துவதாக நாகப்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே நிஜாமுதீன் மேனாள் தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

நாகையில் இன்றைய பூக்களின் விலை நிலவரம்

image

இன்று ஜனவரி 14, நாகை பெரிய கடை தெருவில் விற்பனை செய்யப்பட்ட பூக்கள் இன்றைய விலை முல்லை ரூ.2100, சந்தன முல்லை ரூ.1000, காக்கரட்டான் ரூ.1000, நந்தியாவட்டை ரூ.300, அரளி ரூ.400, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.160, ஆப்பிள் பட்டன் ரோஸ் ரூ.170, பன்னீர் ரோஸ் ரூ.170, மற்றும் செண்டுமல்லி ரூ.80 என்ற விலையில் விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பூக்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

News January 14, 2025

அமைச்சருடன் பைக்கில் பயணித்த நகர மன்ற தலைவர்

image

நாகப்பட்டினத்தில் இன்று திமுக சார்பில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக்கில் நாகப்பட்டினம் நகரை சுற்றி வந்தார். அப்போது அவரது பைக்கில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான மாரிமுத்து பின்னால் அமர்ந்து பயணித்தார். பேரணியில் HR & C மாவட்ட அறங்காவல் குழு தலைவர் நாகரத்தினம் உள்ளிட்டோர் சென்றனர்.

error: Content is protected !!