India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேதாரண்யம் செம்போடை தோப்புத்துறை கரியாபட்டிணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் வரை தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து பொங்கலின் போது கிலோ ரூ.40 வரை விற்றது. தற்போது வரத்து அதிகரித்ததால் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் ஒரு கிலோ ரூ.10 என வீழ்ச்சி அடைந்து விற்பனை செய்யப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று (ஜன.26) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு, அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், இயற்கை மூலிகை, சிறுதானியம் உணவுப் பொருட்கள், மதிப்பீடு பயிற்சி, அழகுக்கலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த பயிற்சிகளில் பங்கேற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ள பயனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. share it now..
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை மீட்கக்கோரிய உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ராணி தலைமையில் தனி தாசில்தார் அமுதா, கோவில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் சதீஷ், நில அளவையர்கள், கோவில் பணியாளர்கள் ரூ.3 கோடி மதிப்பிலான கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என பதாகை வைக்கப்பட்டது.
49.93 லட்சம் பிறப்புக்கு முந்தைய பதிவுகளை பகுப்பாய்வு செய்யும் தமிழக ஆய்வுக்கு பின் பொது சுகாதார மருத்துவ துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2019 முதல் 2024 வரை 15 முதல் 17 வயதுடைய டீன் ஏஜ் பெண்கள் அதிகளவு கருத்தரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில் நாகபட்டினம் மாவட்டம் 3.3 சதவிகிததுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள இளைஞர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் உதவித் தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலகத்திலும் விண்ணப்பத்தினை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள இ-சேவை மையத்தில் சட்ட விரோதமாக போலி ரேஷன், ஆதார் அட்டை தயாரித்த அகஸ்தியன் பள்ளியைச் சேர்ந்த ரஞ்சிதம் (43), சித்ரா (31) ஆகிய 2 பெண்களை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கணினி, பிரிண்டர், லேமினேஷன் எந்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் சம்பந்தப்பட்ட ஆதம் ஆரிப் முத்தலிப் என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 2025 – 26 ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற்கல்வி பள்ளி துவங்குதல், அங்கிகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் இது குறித்த விவரங்களுக்கு 04365 – 250126 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் 1-1-2025 முதல் 31- 03 – 2025 வரையிலான காலாண்டிற்கு நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவினர் மற்றும் ஒராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பற்றோருக்கான உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது , இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் தமிழ் செல்வன், அரசிற்கு பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.