India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசின் முயற்சியில் ‘DRUG FREE TN’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருட்களை பதுக்கு வைத்திருக்கும் இடங்கள் குறித்த தகவல்களை இச்செயலி மூலமாக புகாராக தெரிவிக்கலாம். மேலும் புகாரளிக்கும் நபரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூர் ஆவராணி காலனியை சேர்ந்த சிவகுருநாதன் (32) தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்யும் போது எதிர்ப்பாராத வகையில் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்து விட்டதாக உயிரிழந்தார். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறை தீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 17 திருநங்கைகள் தங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, சுய தொழில் செய்வதற்கு வங்கி கடன் உதவி வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப, அவர்கள் இன்று (07.02.2025) தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தைப்பூச விழாவை முன்னிட்டு வருகின்ற பிப்.11 அன்று ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருந்த முகாம், பிப்.18 செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடி செய்ய ஊக்க தொகை வழங்கப்படுகிறது. பயறு வகை, சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1200 வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம், துத்தநாக சல்பேட்டுக்கு ஏக்கருக்கு ரூ 250 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மர கன்றுகள் சாகுபடி செய்து பயன் பெறும் வகையில் தேக்கு, கொய்யா, மஹா கனி, நீர் மருது, இலுப்பை மற்றும் நாவல் மர கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறையில் நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு மணிக்கு ரூ 1880 க்கும், மற்றும் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை மணிக்கு ரூ. 1160 க்கும் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் தொடர்பு விவரம்” உழவர் செயலியில்” பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. 11.2.2025 ஆம் நாள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருந்த முகாம் தைப்பூசம் விடுமுறை என்பதால் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏற்படாத வண்ணம் 18.2.25( செவ்வாய் )அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
Sorry, no posts matched your criteria.