India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம் -3 ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசுகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று 14.2 2025 இன்று வழங்கினார்கள்.
கீழ்வேளூர் ரயிலடி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையை அங்கிருந்து மாற்றம் செய்து பைபாஸ் சாலையில் திருக்கண்ணங்குடி அருகில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து திருக்கண்ணங்குடி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கிராமத்தில் தொழு நோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ஆம் தேதி வரை களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளனர். எனவே பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு செய்து தொழு நோய் இல்லாத நாகை மாவட்டம் எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்று ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாகை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
நாகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 21ந் தேதி வெள்ளிகிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், மகளிர் இதில் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட வட்டாரங்களில் தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் 13.2.25 முதல் 28.2.25 வரை நடைபெற உள்ளது. தொழு நோயின் அறிகுறிகள் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற அரிப்பில்லாத தேமல், நரம்புகள் தடித்து செயலிழந்து இருத்தல், கை கால் வலி இல்லாத புண்கள் இருத்தல், தோல் பரிசோதனை மூலம் நிரூபணம் செய்தல் இந்த அறிகுறிகள் இருந்தால் களப்பணியாளர்களிடம் தெரியப்படுத்தலாம். மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
தமிழக கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் நாகை கலங்கரை விளக்கம் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. நாகையில் 1985ம் ஆண்டு 48 மீ உயரமுடைய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வங்க கடலின் அழகையும், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரத்தை பார்வையிட்டு ரசிக்க முடியும். 163 அடி உயரம் கொண்டு தலை நிமிர்ந்து நிற்கும் நாகையின் அடையாளம். SHAREIT
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனி, பகுதியைச் சேர்ந்த அருள் சக்தி என்பவர் அருகில் குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் போலீசாரக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர்கள் உடன் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Sorry, no posts matched your criteria.