Nagapattinam

News August 24, 2024

தொலைபேசி வழியாக பயனாளிகளிடம் கருத்து கேட்ட ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் கலந்துக்கொண்டு தமிழக அரசின் நலத்திட்டங்கள் மூலம் பெறப்பட்ட பயனாளிகளிடம் தொலைபேசி மூலம் கருத்துக்களை இன்று (23.08.2024) கேட்டறிந்தார். அப்போது அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News August 24, 2024

நாகை டி.எஸ்.பி-க்கள் இடமாற்றம்

image

நாகை மாவட்டத்தின் நில மோசடி தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த ஏ.அப்துல் ரஹ்மான் புதுக்கோட்டை டி.எஸ்.பி-யாகவும், நாகை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த பி.எஸ்.ராமகிருஷ்ணன் மதுரை பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவின் டி.எஸ்.பி-யாக நியமனம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

News August 23, 2024

நாகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.செந்தில்நாதன் மற்றும் அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

News August 23, 2024

நாகை மீனவர்கள் 11 பேர் கைது

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகுடன் நாகை மீனவர்கள் 11 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யபட்டனர். நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு பருத்தித்துறை வடகிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 23, 2024

நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.29இல் நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

வேளாங்கண்ணிக்கு கூடுதலாக 1,050 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டை விட விரிவான ஏற்பாடுகள் செய்து வருவதுடன், தமிழகம் முழுவதிலும் இருந்து விழா நாட்களில் கூடுதலாக 1,050 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பிற்கு பேராலய அதிபர் இருதயராஜ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு ஆட்சியர் அழைப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.08.2024 வெள்ளி அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தி குறிப்பு வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

News August 22, 2024

நாகையில் ஃபியூச்சர் எக்ஸ்போ 24- சிறப்பு கண்காட்சி

image

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து மூன்று நாட்கள் சிறப்பு அறிவியல் கண்காட்சி ‘ஃபியூச்சர் எக்ஸ்போ 24’ இன்று துவங்கியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படைப்புகளை பார்வையிட்டு அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

News August 22, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் கோவை, தேனீ, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News August 22, 2024

கால தாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும்: கலெக்டர்

image

நாகை அரசு மருத்துவமனைவியில் நாகை மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சந்தித்து, மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு கால விரயமின்றி உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். மேலும் மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.