Nagapattinam

News August 27, 2024

யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை: ஆர்.எஸ்.பாரதி

image

நாகையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. இன்றைய காலகட்டத்தில் ஓரிரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே புதிய கட்சிகள் தாங்கும். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது எனத் தெரிவித்தார் அவர்.

News August 26, 2024

கீழ்வேளூரில் 6 பேர் கைது

image

கீழ்வேளூர் காக்கழன கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரத்தமிழன், இவர் காரில் வேகமாக சென்றதை கண்டித்த பொது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டதால் அன்று இரவு சிலர் சாய்ராம் மற்றும் வீரத்தமிழன் ஆகியோர் வீடுகளுக்கு சென்று சூறையாடினர். புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் 6 பேரை கைது செய்தனர். அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News August 25, 2024

விளையாட்டுப் போட்டிகளில் பதிவு செய்ய கால நீட்டிப்பு : ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள் 02.09.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் நடத்தப்படவுள்ளது. https://sdat.in/cmtrophy/player-login/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். SHARE NOW!

News August 25, 2024

நாகை மீனவர்களுக்கு சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம்

image

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விசைப்படகுடன் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் பெற்று யாழ்பாணம் சிறையில் எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.‌

News August 24, 2024

நாகை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்க கோரிக்கை

image

நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா கோயில் அமைந்துள்ளது. இப்பேராலயத்தில் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி புனித கொடியேற்று விழாவும், செப்டம்பர் 8-ஆம் தேதி பெரிய தேர்பவனியும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News August 24, 2024

காவல் அதிகாரிகளுடன் எஸ்.பி மாதாந்திர ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

News August 24, 2024

நாகையில் எஸ்.பி ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ரோந்து பணிக்காக காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் ஆய்வு செய்தார். பின்பு காவலர்கள் முறையாக வாகனங்களைப் பராமரிக்க அறிவுரை கூறினார்.

News August 24, 2024

வேளாங்கண்ணி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

image

தாம்பரம் – வேளாங்கண்ணி (06119) இடையே வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியும், வேளாங்கண்ணி – தாம்பரம் (06120) இடையே ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்த சிறப்பு ரயிலில் 3 ஸ்லீப்பர், 3 மூன்றாம் வகுப்பு ஏசி, 7 பொதுப் பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

News August 24, 2024

நாகை மாவட்டத்தில் 3119 மாணவர்கள் பயன்: ஆட்சியர்

image

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை மேற்கொள்ள மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 3,119 பேர் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2025-ஆம் ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அதன்படி மாணவ, மாணவியர்கள் 01.07.2025 அன்று 11½ முதல் 13 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 02.07.2012-க்கு பின்னர் 01.01.2014-க்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும் என நாகை ஆட்சியர் ஆகாஷ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்