Nagapattinam

News August 31, 2024

வேளாங்கண்ணி சிறப்பு ரயில் நாளை ரத்து

image

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சென்னை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், சென்னையில் இருந்து நாளை (செப்.1) இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், வேளாங்கண்ணியில் இருந்து 2-ஆம் தேதி சென்னைக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 31, 2024

விவசாயிகள் கெளரவ நிதி பெற விண்ணப்பிக்கலாம்

image

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கெளரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெற வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காதவர்கள் அருகில் உள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி ஆதார் மற்றும் நில விவரங்களை இ.சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

நாகையில் இலவச தையல் எந்திரங்கள் வழங்கல்

image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி கூட்டரங்கில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா நேற்று (ஆக.30) வழங்கினார். அப்போது மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தாட்கோ தலைவர் மதிவாணன் கீழ்வேளூர் எம்.எல்.ஏ நாகை மாலி உடன் இருந்தனர்.

News August 31, 2024

நிலம் வாங்குவதற்கு மானிய கலெக்டர் நிதியுதவி

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் நன்னிலம் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்குவதற்கு கருங்கண்ணியை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் நேற்று (ஆக.30) வழங்கினார். அப்போது தாட்கோ நிறுவன நாகை மாவட்ட பொதுமேலாளர் சக்திவேல் உடன் இருந்தார்.

News August 31, 2024

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை

image

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மாதாந்திர உதவி தொகை ரூ.6000 பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இது குறித்து முழுவிவரங்களுக்கு நாகை மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04365 – 253059 அல்லது 7401703497 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

நாகை அருகே மூதாட்டி படுகொலை; 4 பவுன் நகை கொள்ளை

image

வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள் (60). நேற்று இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியை கொடூரமாக கத்தியால் குத்தி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் தோடு உட்பட 4 பவுன் நகை கொள்ளையடித்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 30, 2024

வேளாங்கண்ணி: ரூ.20 லட்சத்தில் ஆடு அறுக்கும் தொட்டி கட்டிடம்

image

வேளாங்கண்ணியில் பேரூராட்சி சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆடு அறுக்கும் தொட்டி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், திமுக நகர செயலாளர் மரிய சார்லஸ், செயல் அலுவலர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News August 30, 2024

20 லட்ச ரூபாயில் ஆடு அறுக்கும் தொட்டி கட்டிடம்

image

வேளாங்கண்ணியில் பேரூராட்சி சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆடு அறுக்கும் தொட்டி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், திமுக நகர செயலாளர் மரிய சார்லஸ், செயல் அலுவலர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News August 29, 2024

வேளாங்கண்ணி பேரால திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

image

உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக ஆலயத்தில் வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து, தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை புனிதம் செய்து கொடியேற்றி வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.

News August 29, 2024

நாகையில் 29, 30 விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 29, 30 சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது 45 வயதுக்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது