Nagapattinam

News February 1, 2025

நாகை: எச்சரிக்கை பலகையில் மோதி விபத்து

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பிரதான சாலையில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த சிவக்குமார் என்பவர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விபத்து எச்சரிக்கை பலகையில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2025

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் – கலெக்டர் 

image

நாகை மாவட்டத்தில்கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கோழி காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வருகின்ற பிப்ரவரி 1 முதல் 14 வரை நடைபெற உள்ளது. எனவே கோழி வளர்ப்போர் மற்றும் பண்ணை வைத்திருப்போர் இந்த முகாம்களில் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்

image

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் . தாட்கோ சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்த தகவல் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகி பொதுமக்கள் பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப. ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

நாகை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6. 2 2025 வியாழன் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 31, 2025

கஞ்சா விற்பனை குறித்து தெரிவிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் உங்கள் எஸ்.பியிடம் பேசுங்கள். 8428103090 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

நாகை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்

image

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஊழியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் நடக்கிறது. இதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 31, 2025

கோழிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

image

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கோழி காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வருகின்ற பிப்ரவரி 1 முதல் 14 வரை நடைபெற உள்ளது. எனவே கோழி வளர்ப்போர் மற்றும் பண்ணை வைத்திருப்போர் இந்த முகாம்களில் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

நாகையில் இன்றைய பூக்களின் விலை நிலவரம்

image

நாகை பெரிய கடை தெருவில் இன்று (ஜனவரி 31) விற்பனை செய்யப்பட்ட பூக்கள் மற்றும் அவைகளின் விலைகள்: செண்டுமல்லி ரூ.120, ஆப்பிள் பட்டன் ரோஸ் ரூ.220, பன்னீர் ரோஸ் ரூ.210, செவ்வந்தி ரூ.240, அரளி ரூ.300, சம்பங்கி ரூ.230, நந்தியாவட்டை ரூ.600, காக்கரட்டான் ரூ.900, சந்தன முல்லை ரூ.1200, முல்லை ரூ.1400 என்ற விலையில் விற்கப்பட்டது.

News January 30, 2025

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி

image

நாகப்பட்டினம் வீரத்தமிழன் சிலம்ப கலைக்கூடம் நடத்தும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சிக்கான LED ஒளி விளக்குடன் கூடிய 10,800 நொடிகள் இடைநில்லா சிலம்பம் சுற்றி சிலம்ப மாணவர்கள் சாதனை படைக்க உள்ளனர். வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி பாப்பா கோவிலில் நடைபெறவுள்ளது.

News January 30, 2025

நாகை: மீன்பிடி வலையில் சிக்கிய அரியவகை ஆமை

image

வேதாரண்யம் அருகே மணவாக்கால் பகுதி கடற்கரைக்கு முட்டையிட வந்த 40 கிலோ எடை கொண்ட ‘ஆலிவ் ரிட்லி’ என்ற அரியவகை ஆமை ஒன்று நேற்று (ஜன.29) கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலையில் சிக்கியது. இதனை அடுத்து வலையில் சிக்கி தவித்த அந்த ஆமையை கண்ட அப்பகுதி மீனவர்கள் சிலர், அதனை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

error: Content is protected !!