Nagapattinam

News February 6, 2025

மாற்று பயிர்கள் சாகுபடிக்கு ஊக்கத் தொகை

image

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடி செய்ய ஊக்க தொகை வழங்கப்படுகிறது. பயறு வகை, சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1200 வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம், துத்தநாக சல்பேட்டுக்கு ஏக்கருக்கு ரூ 250 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News February 6, 2025

வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் மர கன்றுகள்

image

வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மர கன்றுகள் சாகுபடி செய்து பயன் பெறும் வகையில் தேக்கு, கொய்யா, மஹா கனி, நீர் மருது, இலுப்பை மற்றும் நாவல் மர கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News February 6, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறையில் நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு மணிக்கு ரூ 1880 க்கும், மற்றும் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை மணிக்கு ரூ. 1160 க்கும் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் தொடர்பு விவரம்” உழவர் செயலியில்” பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. 11.2.2025 ஆம் நாள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருந்த முகாம் தைப்பூசம் விடுமுறை என்பதால் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏற்படாத வண்ணம் 18.2.25( செவ்வாய் )அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

News February 6, 2025

நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News February 6, 2025

நாகை தொழிற்பழகுநர் பயிற்சி முகாம்: கலெக்டர்

image

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிப். 10- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு பயிற்சியாளா்களை தோ்வு செய்யவுள்ளன. ஐ.டி.ஐ முடித்த விருப்பமுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். விவரங்களுக்கு 04365-250126.

News February 5, 2025

வாழக்கரையில் 7ஆம் தேதி சாலை மறியல்

image

கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்மென உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7ஆம் தேதி வாழக்கரையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம் தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் தேதி மாற்றம்

image

நாகை மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வருகிற 11ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம் தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை நாள் என்பதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் வருகின்ற 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் இன்று மாலை தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

டிராக்டர் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவர் பலி

image

அரியலூர் மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் விண்ணரசன் (வயது 24). இவர் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 2 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் விண்ணரசனும், அதே கல்லூரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பவரும் இருசக்கர வாகனத்தில் நாகை கோட்டைவாசல் படி அருகே சென்ற போது மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதி விண்ணரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News February 5, 2025

தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

image

நாகை மாவட்டம் தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. நாகை மாவட்ட அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் 10.2.2025 திங்கள் காலை 10 மணி முதல் 4:00 மணி வரை நடைபெற உள்ளது. ITI பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் புகைப்படம் & அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!