India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் பதிவு செய்யும் காலம் ஏப்.15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதென கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு<<-1>> இங்கே க்ளிக்<<>> செய்யவும்.
நாகை, கோடிக்கரையிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று காலை கடலுக்கு சென்றனர். அப்போது கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து விட்டு திரும்பி வரும்போது கடலில் துண்டான மீன்பிடி வலையில் ஆலிவ் ரிட்லி ஆமை அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக ஆமை சிக்கொண்டிருந்த வலையை வெட்டி ஆமையை விடுவித்தனர். இந்நிலையில் இதனையறிந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவர்களை பாராட்டினர்.
நாகப்பட்டினத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சென்று மூலவரான காயாரோகணேஸ்வரரை வழிப்பட்டால் வாழ்வின் கர்ம வினைகள் என்று சொல்லக் கூடிய தற்போதைய மற்றும் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சஞ்சலங்களும் இன்றி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்பது ஐதீகம். கர்ம வினைகள் நீங்குவதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹோம் நர்ஸ் (Home Nurse) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000-25,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி நாதக வேட்பாளராக இடுபாவனம் கார்த்திக் போட்டியிட உள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வேட்பாளரின் அறிமுக கலந்தாய்வு கூட்டம் இன்று வேதாரண்யத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாகப்பட்டினம், வலிவலம் பகுதியில் அருள்மிகு மனத்துணைநாதர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம் வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும், மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற கலக்கங்களும் பறந்தோடும். மேலும் இருதய சம்மந்தமான நோய்கள் நீங்கும். வாழ்வில் கவலையின்றி வாழ்வதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
நாகை மாவட்டத்தில் 20 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
நாகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பழங்கால கட்டடம் ஒன்று இடித்து, மரத்தை வெட்டியதன் விளைவாக, 1930ல் சுமார் 50க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டன. அதில், கல்வெட்டொன்றில் கி.பி. 1006ல் ராஜராஜ சோழனால் சூடாமனி விஹாரமென்ற இப்புத்த மடாலயம் கட்டப்பட்டது என்பது தெரியவந்தது. பின் இச்சிலைகள் சென்னை மும்பை உட்பட உலகெங்கும் 14 அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வரும் 11-ந்தேதி அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!
Sorry, no posts matched your criteria.