Nagapattinam

News February 26, 2025

ஓய்வூதியர் குடும்பத்தினருக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

image

நாகை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள் இறந்து விட்டால் அந்த தகவலை உடனடியாக தொடர்புடைய கருவூலத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ATM மூலமாக ஓய்வூதியரின் குடும்ப உறுப்பினர்கள் பணம் எடுப்பது சட்டப்படி குற்றமாகும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

நாகை கோ ஆப் டெக்ஸில் சிறப்பு சலுகை!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் நிறுவன கிளையில் எதிர்வரும் பிப்ரவரி 27 வரை சிறப்பு விற்பனையாக இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் எனும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அனைத்து சேலை இரகங்கள், படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் ஆயத்த ஆடை ரகங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

News February 26, 2025

நாகை மாவட்டத்தில் திடீர் மழை, விவசாயிகள் வேதனை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், திருக்குவளை, தேவூர், வலிவலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வெயிலுடன் கூடிய சாரல் மழை பெய்தது. பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் குடைகளைப் பிடித்த படி பயணித்து வருகின்றனர். இந்த திடீர் மழையால் கொள்முதல் நிலையங்களில் குவிக்கபட்டிருக்கும் நெல் மூட்டைகள் சேதம் அடைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

News February 26, 2025

நாகை தபால் நிலையத்தில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பிப்.28 வரை நடைபெறும் இந்த முகாமில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் சேரலாம். ரூ.5 லட்சம் காப்பீடுக்கு ரூ.320, ரூ.10 லட்சத்து ரூ.559, ரூ.15 லட்சத்துக்கு 799 பிரிமியமாக செலுத்த வேண்டும். மேலும் வாகனங்களுக்கான காப்பீட்டு திட்டங்களும் உள்ளன என அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

News February 26, 2025

வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே திறக்கப்படும் வாசல்

image

திருவிடைமருதூர் , தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில். மறுபிறவி இல்லாதவர்களே இக்கோயிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆண்டிற்கு இரு முறை சிவராத்திரி மற்றும் மாசி மகத்தில் மட்டும் திறக்கப்படும் சூரிய மண்டல வாசல் வழியாக விஸ்வநாதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு 21 தலைமுறை சாபம் நீங்கும், சிவராத்திரியான இன்று மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை சூரிய மண்டலவாசல் திறந்திருக்கும்.

News February 26, 2025

நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து 3 நாட்களுக்கு ரத்து

image

மோசமான வானிலை காரணமாக இன்று (பிப்.26) முதல் பிப்.28 வரை 3 நாட்களுக்கு நாகை -இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கப்பல் சேவை தொடங்கிய 4 நாட்களிலேயே மீண்டும் ரத்தானதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், மார்ச் 1 முதல் நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம்போல் தொடங்குமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News February 25, 2025

288 மனுக்களுக்கு தீர்வு காண உத்தரவு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 288 மனுக்களை பெற்று அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்

News February 24, 2025

தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் காளியம்மாள்

image

நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்வதாகவும், தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடருமென நாகை அக்கரைப்பட்டி டாடா நகரை சேர்ந்த காளியம்மாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இவருடைய இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

News February 24, 2025

அஞ்சல் காப்பீடுகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்

image

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க மார்ச் 1 முதல் மே 31 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தாமத கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்பதால், பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாகபட்டினத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!