India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை (04.10.2024) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை எடுத்துரைக்கலாம் என தனது செய்தி குறிப்பில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
நாகை, தெற்கு பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவர் திமுகவை சோ்ந்த மகேஸ்வரன். இவரது காா் கண்ணாடியை மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவர் மீதும் போலீசார் வழக்கு பதியவுள்ளதாக தெரிய வந்தது. இதனால் மகேஸ்வரன் காவல் நிலையத்தில் விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நாகப்பட்டினம் பகுதியில் மகாத்மா காந்தியடிகள் 156வது பிறந்த நாள் விழா இன்று அக்டோபர் 2ந்தேதி பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கோவி.செழியன் பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன்படி நாளை 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் வருகை தருகிறார். அப்போது திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.
நாகை பட்டினச்சேரி கிராமத்தின் மீனவ பஞ்சாயத்தார் இரு பிரிவாக உள்ளனர். இதில் ஒரு பிரிவினர் அங்குள்ள சீராளம்மன் கோவில் திருவிழாவை இன்று நடத்த உள்ளனர். இதனால், இரு தரப்பு மீனவர்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு அனைவரின் பங்களிப்புடன் விழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மற்றொரு பிரிவினர் போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலனிடம் புகார் கொடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நவீன் குமார் என்பவரின் வாரிசுதாரர் விக்னேஷ் குமார் என்பவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை நாகை ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். பணியினை சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், பட்டமங்கலம், ஆதமங்கலம், தெற்குபனையூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. 146 வீடுகள் கட்டாமலேயே பயனாளிகள் பெயரில் அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்வேளூர், நாகை, நாகூர், காரைக்கால் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால் – திருச்சி, காரைக்கால் – தஞ்சை வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் இன்று முதல் 31ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி திருச்சி – காரைக்கால் ரெயில் திருவாரூர் வரையும் காரைக்காலில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்கள் திருவாரூரில் இருந்தும் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பேபி தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 272 மனுக்களைப் பெற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் என நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழாவான காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 2.10.24 ஒருநாள் தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் எப்.எல் -1, எப்.எல்-2, எப்.எல்-3. எப்.எல்-3ஏ. எப்.எல்.3-ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.