India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இன்று காலை யாகசாலை பூஜை நிறைவு பெற்ற பின்னர் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடன் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் நாகை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, நாகை நாடாளுமன்ற தொகுதியில் பெண் ஊழியர்களை மட்டுமே கொண்ட 6 சிறப்பு வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நாகை மாவட்டத்தில் 104 வாக்குசாவடிகள் பதட்டமானவை என்பது கண்டறியப்பட்டு அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
நாகை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து சட்டத்துறை துறை அமைச்சர் ரகுபதி மீனவ கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அக்கரைப்பேட்டை, கல்லார், உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இராமநாதபுரம் ராஜாவின் வாரிசு மூலம் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை மீட்டு காட்டுவோம்” என உறுதியளித்தார்.
நாகை அடுத்த பாப்பா கோயிலில் உள்ள வீடு ஒன்றில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று மேற்கொண்ட சோதனையில் ஒரு வீட்டில் பண்டல், பண்டலாக சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பழனி என்பவரை கைது செய்து மற்றொருவரை தேடிவருகின்றனர்.
நாகை தொகுதியில் தேர்தல் செலவு கணக்குகளை செலவின பார்வையாளர் குழு கண்காணித்து வருகிறது.
வேட்பாளர்கள் தங்கள் செலவினங்களை தனி வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை வரும் 8, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கார்த்திகா இன்று செருதூர் மீனவ கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு மீன் விற்பனை செய்யும் பெண்களுடன் அமர்ந்து மீன் விற்பனை செய்தும், மீன்களை சுத்தம் செய்தும் வாக்கு சேகரித்தார். அவருடன் அக்கட்சியின் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் உட்பட பலர் இருந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு பகுதியைச் சேர்ந்த மணிமொழி, கவிதா தம்பதியினரின் மகள் மகதி சர்வதேச சதுரங்க பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு பயிலும் இவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும், இவர் நாகை மாவட்ட அளவில் சர்வதேச சதுரங்கப்போட்டியில் இடம்பெற்ற முதல் பெண் சதுரங்க ஆட்டக்காரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை-2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி அகரகொந்தகை கிராமத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், கையெழுத்திட்ட நேர்முக கடிதத்தை அஞ்சலில் அனுப்பி வைக்க வருவாய் கோட்டாட்சியரிடம் நேற்று ஒப்படைத்தார்.
Sorry, no posts matched your criteria.