Nagapattinam

News October 5, 2024

தொழில் முனைவோர்களுக்கு சான்றிதழ் பயிற்சி

image

தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு பயிற்சி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தனது செய்திகுறிப்பில் தெரிவித்தார். நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் ஒரு ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயனடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 5, 2024

தயார் நிலையில் 10,000 மணல் மூட்டைகள்

image

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் சாலை ஓரங்களில் ஆற்றுக் கரை உடைப்புகளை சீரமைக்கவும் நெடுஞ்சாலை துறை சார்பில் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மண்வெட்டி, மரம் அறுக்கும் கருவி, டிராக்டர்கள் பொக்ளின் இயந்திரங்களும் மீட்பு பணிகளுக்காக தயாராக உள்ளது என நெடுஞ்சாலைதுறை நாகை கோட்ட பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

News October 5, 2024

நாகை அருகே விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

image

வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கி சென்ற முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார், திருபூண்டி வளைவில் இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மீது மோதாமல், ஓட்டுநர் காரை வளைத்தபோது, கார் பெரியாச்சி கோவில் சுற்றுச்சுவரில் மோதியது. சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் ஓஎஸ்.மணியன் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இல்லாமல் உயிர் தப்பினார். மேலும் கீழே விழுந்த அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News October 5, 2024

நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

விவசாயிகள் மாற்றுப் பயிராக பயறு வகை சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. ஜிப்சம் மற்றும் துத்தநாக சல்பேட்டுக்கு ஏக்கருக்கு ரூ.250 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலோ முன்பதிவு செய்து பயன் பெற நாகை ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.

News October 5, 2024

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு பயிற்சி தொடங்கவுள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் நேர்காணல் நடத்தப்பட்டு, நவம்பர் 4ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர oneyearcourse.editn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 6382436094 என்ற எண்ணை தொடப்புக்கொள்ள நாகை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 5, 2024

வேளாங்கண்ணியில் தூய்மைப்பணியாளர்களுக்கு தரம் பிரிக்கும் முறை பயிற்சி

image

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா மற்றும் செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுரைத்தலின்படி அயர்லாந்து மாணவர்கள் மற்றும் உதவும் நண்பர்கள் அறக்கட்டளை மூலமாக பேரூராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு பணியின்போது உள்ள மன அழுத்தம் மற்றும் குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் போக்கும் பயிற்சி மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பையென தரம் பிரிக்கும் முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

News October 4, 2024

நாகைக்கு சட்டமன்ற மதிப்பீட்டு குழு வருகை

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் அதன் தலைவர் காந்திராஜன் தலைமையில் வருகின்ற 8ந்தேதி நாகை மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, நெடுஞ்சாலை, சிறைச்சாலை, குடிநீர், நகராட்சி நிர்வாகம் இந்து சமய அறநிலைய துறை உள்ளிட்ட 10 துறைகளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

திருமருகலில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

மருங்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் மகள் துர்கா (வயது 21). இவர் திருவாரூரில் உள்ள திரு.வி.க கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் துர்கா கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இன்று வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 4, 2024

நாகை: உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

image

வக்பு வாரியத்தில் பதிவு பெற்ற வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு ரூ.25,000 அல்லது 50 சதவீத மானியத்தில் இரு சக்கர வாகனங்கள் வாங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது. இமாம், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை அணுகி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 4, 2024

நாகை: திருக்கோவில் சார்பில் ஏழைகளுக்கு திருமணம்

image

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண் இணைகளுக்கு தங்க தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கி வருகின்ற 21ந் தேதி நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இதில் பயன்பெற விரும்புவோர் உடன் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.