India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவினர் வெடி வைத்து நேற்று குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் விஏஓ வீரமணி கொடுத்த புகார் என இரண்டு வழக்குகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட இரட்டை சரம் வெடியை விற்பனை செய்த வெடிக்கடையினை வருவாய் துறையினர் இன்று பூட்டி சீல் வைத்தனர்.
நாகை கீரை கொல்லை தெருவில் ரயில்வே கீழ் பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இது சம்பந்தமாக ஆய்வு செய்ய வந்த ரயில்வே துறை கீரை கொல்லை தெருவில் ஆய்வு செய்து, கீழ் பாலம் அமைப்பதற்கு போதிய சாத்திய கூறுகள் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகூர் பட்டினச்சேரியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் முடிந்த பிறகு கச்சத்தீவை மீட்பது உறுதியெனவும், மக்கள் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெண்மணி ஆர்ச் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரி சுந்தர் ராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி தாலுகா மடப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உரிய ஆவணங்களின்றி தனது ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற ரூ.59,610-ஐ பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில அளவிலான சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில், திருவாரூர் தேர்தல் செலவின பார்வையாளர் வருண்சோனி, நாகை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகை, திருவாரூர் எஸ்பிக்கள் உடன் இருந்தனர்,
கீழ்வேளூர் அருள்மிகு அஞ்சு வட்டத்தம்மன் உடனுறை அட்சய லிங்கசாமி ஆலய தேர் திருவிழா இன்று விமர்சையாக துவங்கியது. முன்னதாக தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை அவுரி திடலில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஒ.எஸ்.மணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் பங்கேற்று அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து பேசினார்.
திட்டச்சேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் ஏற்பாட்டின் பேரில் இப்தார் விழா நேற்று நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம் கிறிஸ்டியன் உள்ளிட்ட ஜாதி மத பேதமின்றி 500க்கும் மேற்பட்டோர் அழைப்பிதழ் வழங்கியதின் பேரில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் & நாகம்மன் கோயிலில் அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள சுமார் 7 அடி உயரம் உடைய மதுரை வீரன் சிலை முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் பூஜையும் பின்னர் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு மகா தீபராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.