India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குச் நாகை அக்கரைப்பேட்டை வேதாரணியம் பகுதியில் கடலுக்குச் சென்ற 80 சதவீத படகுகள் இன்று மாலை வரை கரையை திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள படகுகள் இன்று நள்ளிரவுக்குப் கரை திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
நாகை மக்கள்வைத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நாகை அபிராமி அம்மன் திடலில் மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் மக்களை உளவியல் ரீதியாக மூளைச்சலவை செய்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.
நாகை மக்களவைத் தொகுதியில் பணியாற்றும் வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை இன்று முதல் ஏப்ரல்.16ஆம் தேதி வரை செலுத்திட நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வசதி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து , மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று முதல் நபராக வாக்கு செலுத்தினார்.
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. அதன் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் இன்று காலை 6:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தின் நகர துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள பாலகிருஷ்ணன், தன்னுடன் பணியாற்றும் சக காவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு தன்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிறந்துள்ள புது வருடத்தில் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியோடும் வளமுடன் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கீழ்வேளூர் அடுத்த தேவூர் பகுதியில் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் தலைமையில் தொண்டர்கள் நேற்று வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த ஒரு முறை மட்டும் பாஜகவிற்கு வாக்களித்து பாருங்கள் நாடாளுமன்றத்தில் உங்களுக்காக வேட்பாளர் குரல் கொடுப்பார். மேலும் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் வாக்காளர்கள் காலிலேயே விழுந்து வேட்பாளருக்காக ஆதரவு திரட்டினார்.
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் சாட்டியக்குடி மற்றும் வலிவலம் ஊராட்சியில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினார்.
நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன்
சுவாமி ஊர்வலம் நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 11ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. இவ்விழாவினை 66 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இந்து,கிறிஸ்டின், முஸ்லிம், என மூன்று மதத்தை சேர்ந்தவரும் உபயதாரர்களாக பங்கு கொண்டு நடத்தி வருவது மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது.
நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை தேர்தல் (ஏப்ரல்.19) அன்று நடைபெறவிருக்கும் மக்களவை பொது தேர்தலில் 100% வாக்களிக்கும் பொருட்டு கடைகள், வர்த்தக மற்றும் உணவு நிறுவனங்கள், மற்றும் மோட்டார் போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 கீழ் பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதனை மீறி செயல்படுபவர்கள் புகார் அளிக்க 9442912527 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம் ஆட்சியர் அறிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.