India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(மே 16) நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் திறம்பட பணியாற்றிய போலீசாருக்கும் வெகுமதி, சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோவில், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். பல புராணாக் கதைகளை தாங்கிய இதில், சிவன் வெண்மணலால் ஆன லிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோவிலைச் சுற்றி பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்தியர் தீர்த்தக் குளங்களும் உள்ளன. இக்கோவிலில் நவகிரங்கள் அனைத்து வரிசையாக தெற்கு நோக்கி அமைந்திருப்பது தனித்துவமானதாகும்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் நாள் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 13 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில், நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் பங்கேற்றனர்.
காரையூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிபவர் பிரபாகரன். அதே ஊராட்சியில் குடிநீர் தொட்டி இயக்குபவராக வெங்கடசலம் பணிபுரிகிறார். இந்நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி போவது குறித்து பிரபாகரன் வெங்கடாசலத்திடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வெங்கடாசலம் பிரபாகரனை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் திருக்கண்ணபுரம் போலீசார் வெங்கடாசலத்தை நேற்று கைது செய்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் குடிநீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. நாகை பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் வகையில் அதை தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் குடிநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களின் விலை வழக்கத்தை விட ரூ.20 வரை அதிகரித்துள்ளது. பல இடங்களில் தட்டுப்பாடும் நிலவுகிறது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.10% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.17 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.92 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மாணவர்கள் 87.43 % பேரும், மாணவியர் 94.27 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.09 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.