India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

நாகை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <

நாகை மாவட்டத்தில் புகையான் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நெல் வயல்களில் 8 அடிக்கு 1 அடி பட்டம் பிரித்து விட வேண்டும். வயலில் உள்ள தண்ணீரை உடனடியாக வடிகட்டுதல், தேவைக்கு அதிகமாக யூரியா இடுவதை தவிர்த்தல், வேப்ப எண்ணெய் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை 1 லி தண்ணீருக்கு 3 மி.லி என்ற வீதத்தில் கலந்து தெளித்து புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பி.வி.ஆர்.விவேக் வெங்கட்ராமன் என்பவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமனம் செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட தலைவருக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாகை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.

கீழ்வேளூர் அருகே தொழுவத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (29). கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின் ரோட்டில் மருந்து கடை நடத்தி வரும் தனது நண்பர் அண்ணாதுரையுடன் (28) நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வைரவனிருப்பு அம்மன் கோவில் அருகே சாலையோரம் இருந்த பனை மரத்தில் டூவீலர் மோதி விபத்துக்குள்ளானதில், விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணாதுரை படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘572’ அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10=ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.24,250 – ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.