Nagapattinam

News June 23, 2024

நாகை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு கடும் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு கடும் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடா வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

நாகை அருகே கார் மோதி இருவர் பலி

image

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இன்று(ஜூன்.23) காலை டீக்கடையில் டீ குடித்துவிட்டு அமர்ந்திருந்த ராஜாங்கம்(55) கோவிந்தராஜ்(50) இருவரின் மீதும் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

News June 23, 2024

பொதுமக்களுக்கு நாகை எஸ்.பி. வேண்டுகோள்

image

நாகை மாவட்டத்தில் வெளிமாநில மதுவகைகள் கள்ளச்சாராயம் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து பொதுமக்கள் 9498181257 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது 8428103090 என்ற அலைபேசி எண்ணிலோ தகவல் தரலாம். இது தொடர்பாக தகவல் தருபவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 22, 2024

சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேர்‌ கைது

image

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெளிமாநில சாராய கடத்தல் மற்றும் சாராய விற்பனை தொடர்பாக தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சட்டவிரோதமாக சாராயம் & மது விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News June 22, 2024

வேளாங்கண்ணியில் தெரிந்த முழு நிலவு

image

பொதுவாக பௌர்ணமி தினத்தில், தென்படும் முழு நிலவை பலரும் தரித்திரம் செய்வது வழக்கம். சூரிய பகவானை, தமிழர்கள் எவ்வாறு வழிபடுகிறார்களோ அதற்கு இணையாக சந்திர பகவானையும் வழிபடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நேற்று இரவு தென்பட்ட முழு நிலவை பலரும், வழிபட்டனர். நிலவின் பிரகாச ஒளி மற்றும் அதன் பிம்பம் கடல் நீரில் அற்புதமாக தென்பட்டது.

News June 21, 2024

மீனவ இளைஞர்களுக்கு அழைப்பு

image

நாகை மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு ஊர்காவல் படையில் காலியாக உள்ள 16 பணியிடங்களில் சேர 18 முதல் 50 வயது வரை உடைய 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மீனவர் இனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள் உரிய ஆவணத்துடன் ஜூலை.20 ஆம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள நேர்முக தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என காவல்துறைக் கண்காணிப்பாளர் ஹர்சிங் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

நாகை: ஒரே நாளில் 15 பேர் கைது

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை, கீழ்வேளூர், கீழையூர் திட்டச்சேரி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், 15 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், சுமார் 1000 லிட்டர் சாராயம் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News June 21, 2024

நாகையில் உள்ள அரசு ஐடிஐ விடுதியில் ஆய்வு ‌

image

நாகை அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் செயல்படும் விடுதியில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின்படி, இன்று (ஜூன்.21) காலை அதிகாரிகள் விடுதியில் ஆய்வு செய்தனர். சமையலறை மற்றும் பொருட்கள் வைப்பு அறையிலும் ஆய்வு செய்தனர்.

News June 21, 2024

நாகை: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

image

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய்-சேய் நலப்பணி தடுப்பூசி பணி மற்றும் குடும்ப நலப் பணிகள் நடைபெற உரிய உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்றனர்.

News June 21, 2024

தமிழ்நாடு காவிரி விவசாய சங்க உயர்மட்ட குழு உறுப்பினர் காலமானார்

image

திருக்குவளை வட்டம் வாழக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என். பாலசுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க உயர்மட்ட குழு உறுப்பினராகவும்
திமுக அவைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு விவசாயிகள் சங்கத்தினர், திமுகவினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!