India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு சுமார் 50 பேர் ஒரு தனியார் சுற்றுலா பேருந்து மூலம் வந்துள்ளனர். வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் நாகை அருகே உள்ள கருவேலங்கடை பகுதியில் திடீரென பாதி வழியிலேயே பேருந்து பழுதானது. இதனால் அதில் பயணித்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த முனீஸ்வரி என்ற நபர் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை இன்று கள்ள சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவினால், குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை கிடந்துள்ளது. இதைகண்ட பேராலய பணியாளர்கள் இது குறித்து வேளாங்கண்ணி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாகையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரிசா மாநிலத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நாகையில் முகாமிட்டுள்ளனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்று உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
வேளாங்கண்ணியில் பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பேரூர் பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் வாங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இன்று காலை யாகசாலை பூஜை நிறைவு பெற்ற பின்னர் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடன் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் நாகை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, நாகை நாடாளுமன்ற தொகுதியில் பெண் ஊழியர்களை மட்டுமே கொண்ட 6 சிறப்பு வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நாகை மாவட்டத்தில் 104 வாக்குசாவடிகள் பதட்டமானவை என்பது கண்டறியப்பட்டு அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
நாகை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து சட்டத்துறை துறை அமைச்சர் ரகுபதி மீனவ கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அக்கரைப்பேட்டை, கல்லார், உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இராமநாதபுரம் ராஜாவின் வாரிசு மூலம் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை மீட்டு காட்டுவோம்” என உறுதியளித்தார்.
Sorry, no posts matched your criteria.