Nagapattinam

News May 4, 2024

நாகையில் அதிகாரி ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை சுவரில் வண்ண ஓவியம் வரையும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் நேற்று ஆய்வு செய்தார். ஓவியங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பணியின் காலம் மற்றும் தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

News May 3, 2024

நாகப்பட்டினம் : பூம்புகார் வரலாறு !!

image

காவேரிபூம்பட்டினமான பூம்புகார், முன்காலத்தில் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இந்த ஊர் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமாகும். இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பழைய பூம்புகார் நகரம் கடலுகுள் சென்றதாகவும், அதன் காலம் 15,000 ஆண்டுகளாகவும் இருக்கும் எனக் கண்டறியப்பட்டது. இதன் ஆய்வுகளில் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 3, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

image

நாகப்பட்டினம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை செயல்படுத்த தடையாக உள்ள நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில் குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும், பொது மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாக குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும்‌ முன்னாள் எம்எல்ஏ-வுமான வீ.மாரிமுத்து பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

News May 3, 2024

சுட்டிக்காட்டிய வே டூ – உடனடி நடவடிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News May 2, 2024

சுட்டிக்காட்டிய வே டூ – உடனடி நடவடிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் நேற்று வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News May 2, 2024

நாகை: 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்

image

நாகையில் செயல்பட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் கிராமத்திற்கு  மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கம்போல் அதே இடத்திலேயும் செயல்பட வலியுறுத்தியும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை அருகாமையில் நடந்த ஆர்பாட்டத்தில் வெளிப்பாளையம் வர்த்தக சங்கம், மீனவர்கள், அரசியல் கட்சியினர் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

News May 2, 2024

அனைத்து நாட்களிலும் ஆதார் சேவை

image

நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜோஜப்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அஞ்சலகங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவைகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் புதியதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகளை பயன்படுத்தி கொண்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News May 1, 2024

நாகையில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

நாகை அரசு மருத்துவமனை 11 கிலோ மீட்டர் தூரமுள்ள ஒரத்தூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் நோயாளிகள் பொதுமக்கள் நலன் கருதி நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரத்தூருக்கு காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை 32 நடை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஒரத்தூரில் இருந்து நாகைக்கு காலை 6.15 மணி முதல் இரவு 9.50 மணி வரை 27 நடை பஸ் இயக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பேபி தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

நாகையில் இளநீர் தட்டுப்பாடு

image

நாகை மாவட்டத்தை பொருத்தவரை அனல் காற்றோடு வீசிய கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் சூட்டை தணிப்பதற்காக பொதுமக்கள் இளநீர் நுங்கு உள்ளிட்டவற்றை அதிக அளவில் பருக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாகை மாவட்டத்தில் போதிய அளவில் இளநீர் இல்லாததால் காரணத்தால் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதன் வரத்து குறைவு காரணமாக இளநீர் ஒன்று ரூ 30-45 வரை விற்கப்படுகிறது.

News May 1, 2024

ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி

image

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான
திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்.25 ஆம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. அதன்படி
5ஆம் நாளான நேற்றிரவு ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

error: Content is protected !!