Nagapattinam

News May 5, 2024

பாரா பீச் வாலிபால் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

image

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பீச் வாலிபால் உலக சாம்பியன் ஷீப் போட்டி சீனாவில் மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் தோ்வு செய்யும் பணி நாகை புதிய கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.

News May 5, 2024

நாகை: திருப்பூண்டியில் கபடி போட்டி

image

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் நேற்று இளைஞர்களுக்கான 20ம் ஆண்டு தொடர் கபடி போட்டி நடைபெற்றது .இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்கள் போட்டியை தொடங்கி வைத்து முதல் பரிசினை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி, ஞானசேகரன். வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர், மரிய சார்லஸ், கவுன்சிலர் இளம்பரிதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

News May 4, 2024

கப்பல் போக்குவரத்து சேவை குறித்த ஆலோசனை கூட்டம்

image

நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து எதிர்வரும் மே.13 முதல் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கப்பல் புறப்படும் நேரம், பயணம் கட்டணம் குறித்து எடுத்துரைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்திய வர்த்தகத் தொழிற் குழுமத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கப்பலை இயக்க உள்ள தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

News May 4, 2024

நாகப்பட்டினத்தில் மஞ்சள் அலர்ட்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

வேளாங்கண்ணி கடற்கரையில் ஆண் பிணம்

image

வேளாங்கண்ணி கடற்கரை ஓரத்தில் நேற்று மாலை ஆண் பிணம் கிடப்பதாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் அங்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 53 வயது மதிக்கதக்க அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 4, 2024

ரேசன் அரிசி கடத்தலுக்கு புகார் செய்யலாம்

image

நாகை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். 94982 11989 என்ற எண்ணிற்கும் புகார் தரலாம் என நாகை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

News May 4, 2024

நாகை: மூன்று கடைகளில் ரூ.18000 அபேஸ்

image

நாகூர் கடைத்தெருவில் ஜமால் முகமது என்பவர் ஹார்டுவேர் கடையும் இவரது கடைக்கு அருகே அப்துல்காதர் புத்தக கடையும் சேக்தாவூத் பேன்சி கடையும் வைத்துள்ளனர் நேற்று மதியம் மூன்று கடை உரிமையாளர்களும் தொழுகைக்கு சென்று பின் திரும்பி வந்தபோது மூன்று கடைகளின் கல்லா பெட்டிகள் உடைக்கப்பட்டு மொத்தமாக ரூ.18000 திருட்டு போய் உள்ளது. புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 4, 2024

நாகையில் அதிகாரி ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை சுவரில் வண்ண ஓவியம் வரையும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் நேற்று ஆய்வு செய்தார். ஓவியங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பணியின் காலம் மற்றும் தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

News May 3, 2024

நாகப்பட்டினம் : பூம்புகார் வரலாறு !!

image

காவேரிபூம்பட்டினமான பூம்புகார், முன்காலத்தில் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இந்த ஊர் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமாகும். இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பழைய பூம்புகார் நகரம் கடலுகுள் சென்றதாகவும், அதன் காலம் 15,000 ஆண்டுகளாகவும் இருக்கும் எனக் கண்டறியப்பட்டது. இதன் ஆய்வுகளில் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 3, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

image

நாகப்பட்டினம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை செயல்படுத்த தடையாக உள்ள நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில் குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும், பொது மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாக குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும்‌ முன்னாள் எம்எல்ஏ-வுமான வீ.மாரிமுத்து பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

error: Content is protected !!