Nagapattinam

News May 13, 2024

நாகை மழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

நாகை: மழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

நாகை எம்பி எம்.செல்வராஜ் காலமானார்

image

இந்திய கம்யூ. கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ்(67) இன்று (13.05.24) அதிகாலை காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை(14.05.24) அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News May 12, 2024

நாகை-இலங்கை கப்பல் சேவை மாற்றம்

image

நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவை மே 13ஆம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த கப்பல் சேவை தேதி மே.17க்கு மாற்றப்பட்டது. கப்பல் இயக்குவதற்கான அனுமதி மற்றும் நாகைக்கு கப்பல் வருகையின் தாமதம் காரணமாக கப்பல் சேவை துவங்குவதில் திட்டமிட்ட தேதியில் கப்பலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

News May 11, 2024

நாகை: விவசாய கூலித் தொழிலாளர்கள் கைது

image

நாகையில் மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தொடர்ந்து 11வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முன்னிட்டு, 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

நாகப்பட்டினத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

நாகை 22ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.95% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.54 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.07 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் நாகை மாவட்டம் 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

10th RESULT: நாகையில் 89.70 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் 89.70 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.63 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.59 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

நாகை மீனவர் சென்னையில் கைது

image

சென்னையில் ரூ.1 கோடி‌ மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்ற நாகை மீனவர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 800 கிராம் எச்சம்‌ பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கல எச்சத்தை விற்பனை செய்வதற்காக ஏப். 7ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, தடைசெய்யப்பட்ட திமிங்கல எச்சம் அவரிடம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

error: Content is protected !!