India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி கீழையூர் மேற்கு ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் இருந்து திமுகவை சேர்ந்த கண்ணதாசன், பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த பரமசிவம், சிபிஎம் நடராஜன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் தலைமையில் தங்களை அதிமுக இணைத்துக் கொண்டனர்.
நாகை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்தில் மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ வேதரத்தினம், தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன், கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூன் 3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநங்கைகளுக்கான நல வாரிய அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை எளிதில் பெறும் வகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், மாவட்டத்தின் அனைத்து திருநங்கைகளும் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரியாக வாய்க்கால்களை தூர்வாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தூர்வாரியத்தை கண்டித்து விவசாயிகள் வருகிற 6ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். உடனடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர் வராவிட்டால் சாலை மறியலில் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர் .
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் இந்திய வேளாண்மை திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியுதவியுடன் தேனீ வளர்ப்பு பயிற்சி ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 04365-299 866 மற்றும் 80567086 63 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையம் செயல்படுகிறது. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் கவுன்சிலிங் விண்ணப்பத்திற்கான பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி இங்கு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பதிவு நடைபெறும் என கல்லூரி முதல்வர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்லமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு கையில் ஏந்திய படி கோயில் வளாகத்தை சுற்றி வந்து அம்மனுக்கு பூச்செரிதல் மற்றும்
காப்பு கட்டும் நிகழ்ச்சி
நடைபெற்றது .பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சிக்கலில் வேளாண்மை அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக இங்குள்ள பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் மள மளவென தீ பற்றியதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் கலை இலக்கியம் விளையாட்டு கல்வி மருத்துவம் அறிவியல் மற்றும் தொழில்துறை சமூக பணி மற்றும் தொழில்துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற தகுதியானவர்கள் Award.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.