India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிப்.10 இன்று எம்எஸ் எஸ் 2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் மற்றும் இயக்கம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு செயலாளர் கே எஸ் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை,ஆட்சியர் ப .ஆகாஷ் முன்னிலையில் இன்று (பிப்.10) நடைபெற்றது.

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04365-248121
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

நாகை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <

நாகை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமருகல் உடையான்தோப்பு தெருவை சேர்ந்த சுகந்தி (45) என்பவர் காணாமல் போன தன் கணவரை கண்டுபிடித்து தர கோரி, அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார், சுகந்தி மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகின்ற பிப்.12 மற்றும் பிப்.13 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.