India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் திருமருகல், ஏனங்குடி, வவ்வாலடி, புறாகிராமம், திட்டச்சேரி 01/04/25 முதல் பிள்ளைகளின் நலன் கருதி நாகை டிராஃபிக் மற்றும் லையன்ஸ் டிபார்ட்மெண்ட் அதிகாரிகளுக்கு தணிக்கை செய்ய பொது அழைப்பு விடுத்துள்ளதால் 18 வயது முடிவு பெறாமல் வாகனம் ஓட்டும் சிறார்கள் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கவனமாக இருக்க அனைவருக்கும் Share செய்யுங்கள்
‘பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்’ கீழ் தினமும் 4 முதல் 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய தகடுகளை அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளவர்கள், <
திட்டச்சேரி புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது உஸ்மான் மகன் முகமது தெளபிக் (வயது.19) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். திட்டச்சேரி புடவைகாரத் தெருவை சேர்ந்த தஸ்லீம் மகன் முகமது பாரிஸ் (வயது 13). மோட்டார் சைக்கிலில் திட்டச்சேரி மெயின் ரோடு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் வந்த போது கட்டுப்பட்டை இழந்து சுவற்றின் மீது மோதிய விபத்தில் இருவரும் பலியாக்கினர்.
நாகையில் உள்ள அனைத்து விவசாயிகளும் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 நிதி பெற்று வருகின்றனர். அவர்களில் 7,029 விவசாயிகள் வேளாண் அடுக்க அடையாள எண் பெறாமல் உள்ளனர். அவர்கள் இன்றைக்குள் (மார்ச் 31) தனிப்பட்ட வேளாண் அடுக்க அடையாள எண்ணிற்கு விண்ணப்பித்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதியின் அடுத்த தவணை தொகையை பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..
நாகப்பட்டினம் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் தேவூர் ஸ்ரீ தேவபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராணி உத்தரவின் பேரில் நிலங்களை மீட்டு, தேவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டது. அந்த வகையில், 25,280 சதுர அடியில் (5.81 சென்ட்) நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்
நாகை அருகே புத்தூர் பகுதியில் இன்று போலிசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மீன் ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் மீன் ஜஸ் பெட்டிக்குள் மீன், நண்டுகளுக்கிடையே புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை பதுக்கி கடத்தி கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து 1லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருவாகம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், வேதாரண்யம் வட்டாரத்தில் உள்ள பத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி, உடல்நலம், குழந்தை திருமணம், பாலினச் சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
நாகை மாவட்ட பொதுசுகாதாரத் துறை லேப் டெக்னீஷியன், செவிலியர்கள், ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர், பல் தொழில்நுட்ப வல்லுநர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ரூ.60,000 வரை சம்பளத்தில் உள்ள 28 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.