Nagapattinam

News June 11, 2024

நாகையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை மீண்டும் அதே இடத்தில் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இன்று நாகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10மணிக்கு நடைபெற உள்ளது.

News June 11, 2024

இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை- குறைந்த கடல் சீற்றம்

image

நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வபோது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கடலூர் கிராமங்களில், லேசாக கடல் கொந்தளித்து கடல் சீற்றமாக காணப்பட்டு வந்தது. குறிப்பாக நேற்று இரவும் கன மழை பெய்த சூழலில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இன்று காலை கடல் சீற்றம் குறைந்து நாகை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News June 10, 2024

நாகை: மேட்டூர் வரை நீதி கேட்டு பேரணி

image

கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று ஜூன்.12 மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நீதி கேட்டு பேரணி பூம்புகாரில் இன்று தொடங்கியது. அங்கிருந்து காரைக்கால் வழியாக நாகை மாவட்டத்திற்கு வந்த பேரணி குழுவினர், கோரிக்கைகளை விளங்கி பேருந்து நிலையம், கடைவீதி வழியே சங்கத்தின் பொதுச் செயலாளர்
பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட பலர் மேட்டூர் நோக்கி சென்றனர்.

News June 10, 2024

நாகை மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்ட 701 பள்ளிகள்

image

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்டது. அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 701 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்கள் அடக்கமான உற்சாகத்தோடு பள்ளிக்கு வருகை தந்தனர். நீண்ட இடைநிலைக் பிறகு, தங்களுடைய நண்பர்களை கண்ட மாணவர்கள் ஒருவருக்கொருவர் விடுமுறை கொண்டாட்டங்கள் பற்றி கதைத்து மகிழ்ந்தனர்.

News June 10, 2024

நாகையில் புத்தகங்கள் வழங்கிய ஆட்சியர் 

image

நாகை நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மாணவர்களுக்கு புத்தக நோட்டுகளை வழங்கி,  மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நாகையில் உள்ள 701 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

News June 10, 2024

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தூய்மை பணி

image

நாகப்பட்டினம் நகராட்சி புதிய கடற்கரையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரமன்ற தலைவர் மாரிமுத்து உறுப்பினர் ஜோதிலட்சுமி , நகராட்சி அலுவலர்கள் , தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது

News June 9, 2024

நாகை: தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் IV தேர்வு இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றதை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

News June 9, 2024

நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் காரணமாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் வருகின்ற 10ம் தேதி முதல் வழக்கம் போல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். 

News June 8, 2024

நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் காரணமாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் வருகின்ற 10ம் தேதி முதல் வழக்கம் போல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். 

News June 8, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!