India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த ஆண்டவர், செந்தில், சாந்தகுமார், சேதுராமன், குமார் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் குமார் தவிர மற்ற 4 மீனவர்களும் நேற்று வரை வீடு திரும்பவில்லை. இதனால் அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் 3 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 45 கிமீ தொலைவில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
சென்னை எம்ஜிஆர் மாளிகையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும், வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசனை முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள், நகர பேரூர் செயலாளர்கள், பிற அணி மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகை எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் சாராயம், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மேலாண்மை குழு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்ட அரங்கில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் அலுவலர் பேபி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 15.07.24 அன்று நாகை தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைப்பெற உள்ளதாக ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். இதில் சென்னை , கோவையை சேர்ந்த முன்னனி நிறுவனங்கள் பங்குபெற உள்ளதால் ஐடிஐ படித்த மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்
நாகை மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தணிக்கை பணிக்கு தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் 15.07.24 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். தகவலுக்கு www.nagapattinam.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம்.
நாகை மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 10, 12 ம் வகுப்பு மற்றும் பட்டபடிப்பு முடித்து வேலை இல்லாமல் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியனின் இளைய சகோதரர் ஓ.எஸ்.மூர்த்தி இன்று அதிகாலை தலைஞாயிறு அருகே ஓரடியம்புலத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் (9.07.24 )இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஜீலை 11 அன்று நாகை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆழியூர் அரசு பள்ளியிலும், திருமகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு நரிமணம் அரசு பள்ளியிலும், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தேவூர் திருமலை திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நாகை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக தென்காசியில் மழை பெய்து வருகிறது. மேலும், ஜூலை 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.