India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை அவுரித் திடலில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைக்குனியாது என்கிற நாகை சட்டமன்ற தொகுதி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டனைன் ரவீந்திரன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாகை அவுரித் திடலில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைக்குனியாது என்கிற நாகை சட்டமன்ற தொகுதி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டனைன் ரவீந்திரன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

நாகை வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

நாகை மாவட்டத்தில் இன்று (பிப்.17) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருமருகல், திட்டச்சேரி, நரிமணம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

நாகப்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நகராட்சிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட வரி இனங்களை உரிய நேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறுபவர்கள் மீது அபராத கட்டணம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.