India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை மாவட்ட ஆட்சியரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வருகிற 31ஆம் தேதி கடைசி என்று அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு ரூ.697.15 மட்டும் செலுத்தி, ரூ.36 ஆயிரத்து 500 காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பி.ஆகாஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக பி.ஆகாஷ் ஐ.ஏ.எஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிப்காட் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நாகை அடுத்த காமேஸ்வரம் புனித செபாஸ்தியர் தொடக்கப் பள்ளியில் நேற்று மதியம் நடைபெற்ற விழாவில் 888 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் கையடக்க கணினியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தாட்கோ மற்றும் தலைவர் மதிவாணன் உடனிருந்தனர்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
நாகப்பட்டினம் அடுத்த திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை அருகில் இருந்த உள்ள ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான கோவில் நிலத்தை உதவி ஆணையர் ராணி மற்றும் தனி தாசில்தார் அமுதா தலைமையில் போலீசார் மீட்டனர். மேலும் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று பதாகை வைத்து, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை,குடும்ப அட்டை,வேலைவாய்ப்பு,கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 317 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
நாகை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நாகையில் பிறந்த தமிழ் புலவர் மறைமலை அடிகளாரின் சிலை மேம்பால விரிவாக்க பணிகள் காரணமாக அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதே சிலையை நாகை தம்பிதுரை பூங்காவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன் இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் மறைமலை அடிகளாரின் புகழை போற்றி உரையாற்றினர்.
Sorry, no posts matched your criteria.