Nagapattinam

News July 17, 2024

கோரிக்கை மனுக்களை பெற்ற நாகை எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர் மனுக்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பொதுமக்களிடமிருந்து 9 கோரிக்கை மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

News July 17, 2024

நாகையில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

News July 17, 2024

நாளை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள்

image

நாகை ஒன்றியம் முட்டம், தெத்தி, பாலையூர் மற்றும் வடகுடி ஊராட்சிகளுக்கு இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியிலும், திருமருகல் ஒன்றியம் அகர கொந்தகை, கொத்தமங்கலம் கட்டுமாவடி சீயாத்தமங்கை & ஆலத்தூர் ஊராட்சிகளுக்கு புறாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்வேளூர் ஒன்றியம் ஆணைமங்கலம், கோகூர், வடகரை ஊராட்சிகளுக்கு கோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெறவுள்ளது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வருகிற 31ஆம் தேதி கடைசி என்று அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு ரூ.697.15 மட்டும் செலுத்தி, ரூ.36 ஆயிரத்து 500 காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

நாகைக்கு புதிய ஆட்சியர்

image

நாகை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பி.ஆகாஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக பி.ஆகாஷ் ஐ.ஏ.எஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிப்காட் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

News July 16, 2024

888 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்

image

நாகை அடுத்த காமேஸ்வரம் புனித செபாஸ்தியர் தொடக்கப் பள்ளியில் நேற்று மதியம் நடைபெற்ற விழாவில் 888 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் கையடக்க கணினியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தாட்கோ மற்றும் தலைவர் மதிவாணன் உடனிருந்தனர்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!