Nagapattinam

News August 2, 2024

நாகை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

நாகப்பட்டினத்தை அடுத்த புதிய கடற்கரை சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து மாவட்ட கிராமப்புற ஆண்களுக்கு சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்கத்திற்கான இலவச பயிற்சியினை வரும் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பயன்பெற 18-45 வயது வரம்பிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் முன்பதிவு செய்ய 6374005365 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. SHARE IT NOW!

News August 2, 2024

நாகையில் 8 சிறுமிகள் மாயம்

image

நாகை அருகே சாமந்தப்பேட்டையில் இயங்கி வரும் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் 8 சிறுமிகளை காணவில்லை என காப்பக நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து காப்பகம் திரும்ப வேண்டிய சிறுமிகள் இதுவரை வராததால், புகாரின் பேரில் நாகை எஸ்.பி ஹர்ஷிங், டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் ஆகியோர் காப்பக ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 2, 2024

நாகப்பட்டினத்தில் பெண் வெட்டி கொலை

image

நாகை அருகே வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (41). இவர் நேற்று (அக்.1) இரவு வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில் கடை வாசலிலேயே மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 2, 2024

நாகை: ரூ.4.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

image

நாகையை அடுத்த ஐவநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக இந்து அறநிலையத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நிலத்தை மீட்ட அதிகாரிகள், அதன் சந்தை மதிப்பு ரூ.4.50 கோடி வரை இருக்கும் எனத் தெரிவித்தனர்.

News August 1, 2024

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரம் வழங்கல்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாணிகோட்டகம் மற்றும் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்களை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் நாளை (02.08.2024) மதியம் 12.00 மணியளவில் வழங்க உள்ளார் என ஆட்சியர் ஆகாஷ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

நாகையில் சிறுபான்மையினருக்கு தையல் இயந்திரம்

image

நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் நாகூர் நஜிமுதீன் தையல் இயந்திரங்களை இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 1, 2024

நாகையில் காங்கிரஸ் கட்சியினர் கைது

image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை விமர்சனம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூரை கண்டித்து நாகையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் அனுராக் தாகூரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

News August 1, 2024

நாகை அறிவு சார் மையத்தில் ஆட்சியர் ஆய்வு.

image

நாகை அரசு மருத்துவமனை பின்புறம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவு சார் மைய கட்டிடம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு நாள்தோறும் ஏராளமான மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பெரியோர்கள் உள்ளிட்ட பலரும் நூல்களைப் படித்து பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆட்சியர் ஆகாஷ் அறிவுசார் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

News August 1, 2024

குறுவை பயிர் காப்பீடு: கால அவகாசம் ஒரு நாள் மட்டும் நீட்டிப்பு

image

குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு தேதி நேற்றுடன் நிறைவு பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் குறுவை பயிர் காப்பீடு செய்யாத நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News August 1, 2024

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் 2024-2026 ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நாளை ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!