India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொரவச்சேரியை சேர்ந்த ராஜா என்பவரையும், அவரது நண்பர் வினோத்தையும், போலீசார் கைது செய்ய முயற்சித்தபோது தப்பி ஓடிய ராஜாவுக்கு கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வாள் முனிஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது வெள்ளிக் கிழமையையொட்டி காலை வாள் முனிஸ்வரர், காத்தாயி அம்மன் மற்றும் பச்சையம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு 100 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டு முன்னாள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்ததால் இறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. வரும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி பறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 33
வது வார்டு அட்டைகுள தெரு பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திமுக வார்டு செயலாளர் T.கலையரசன் ஏற்பாட்டில் புதிதாக 3 சூரிய ஒளி மின் விளக்குகள் இன்று அமைக்கப்பட்டது. தங்களின் கோரிக்கை நிறைவேறியதற்கு அப்பகுதியில் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, மண்டல இணை பதிவாளர் கு.க.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் சரபோஜிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி தன் முனைப்பு திட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் இன்று கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைகல்வி ) ரவிச்சந்திரன், தலைமையாசிரியர் சி.முருகேசன், மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட உறுப்பினர் செல்வி. ரக்ஷிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகைமாவட்டம் எட்டுக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வல்லம் உரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வி.ஏ.ஒ ராஜாராமன் (36). இவர் பட்டா பெயர் மாறுதலுக்காக வந்த வீரமணி என்ற விவசாயிடம் (45) லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து கையும் களவுமாக லஞ்சம் பெறும்போது கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை ரீதியான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கடந்த 2005-ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் நாகை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் வருகை தந்த நினைவு பதாகையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் காட்டி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தொழில் முதலீட்டு நிறுவனங்களாக மாற்றும் திட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரண்டு டிராக்டர்களை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு சங்க செயலாளரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகை அன்னை சத்யா காப்பகத்தில் இருந்த 8 சிறுமிகளை காணாததால், புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன 8 சிறுமிகளும் இன்று சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுமிகளிடம் விசாரித்த போது, காப்பக வார்டன் தங்களை தொடர்ந்து திட்டியதால் காப்பகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். இன்று மாலை சிறுமிகள் அனைவரும் நாகைக்கு மீண்டும் அழைத்து வரப்பட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.