India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
நாகை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரன் ஆய்வு செய்தார். தெற்கு பொய்கைநல்லூர் புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின் பொய்கைநல்லூர் ஊராட்சி வடக்கு தெருவில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் முருகன் என்கிற பாலசுந்தரம் உள்ளிட்ட 9 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் விசைப்படகில் இருந்து நிலை தடுமாறி முருகன் இன்று அதிகாலை கடலில் விழுந்தார். இதனை அடுத்து அவரை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது காவிரி கடைமடை பகுதியான வெண்ணார் பிரிவு அரிச்சந்திரா நதியில் தலைஞாயிறு பகுதிக்கு இன்று காலை வந்தடைந்தது. இதனை பொதுப்பணித்துறை ஊழியர்கள் மதகுகளுக்கு பூஜை செய்து வரவேற்றனர். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நீர் நாகை மாவட்டத்தின் சம்பா சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் நேற்று(ஆக.5) நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 226 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆடிப்பெருக்கு மற்றும் குருவை சாகுபடியை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி மற்றும் கொள்ளிடம் நதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொண்டு ஓடினாலும், நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் வந்தடையாமல் இருந்தது. இந்நிலையில் இன்று விடியற்காலை கடைமடை பகுதிகளான வாழக்கரை, மீனம்பநல்லூர் சந்திரநதியை வந்தடைந்ததுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக கௌசல்யா இளம்பரிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு தத்து நிறுவனம் (SAA) அமைப்பதற்கு விருப்பம் மற்றும் அனுபவம் உள்ள குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரும் 20.08.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை www.nagapattinam.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக இருந்த ரஞ்சித் சிங்கை அண்மையில் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை புதிய திட்ட இயக்குநராக ரூபன் சங்கர் ராஜ் நியமிக்கப்பட்டார். இன்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் திட்ட இயக்குநராக ரூபன் சங்கர் ராஜ் பொறுப்பேற்று கொண்டார்.
Sorry, no posts matched your criteria.