India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களில் மட்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயலில் ஈடுபட்ட கீழ்வேளூர், வெளிப்பாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த தரணிகுமார்,ஐயர்தனபால், தவமணி, குணசேகரன் உள்ளிட்ட 12 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள உலக பல்கலைக் கழகங்களுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டியில் இந்திய பல்கலைக்கழக பீச் வாலிபால் அணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.அபிதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட பீச் வாலிபால் சங்கச் செயலாளர் கண்ணன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாகை அரசு கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ளதா அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாளை (ஆக-8) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தாமல், பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.. 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.
நாகை மாவட்டம், சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த தங்குமிடம், உணவகம், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 வகையான விருதுகள் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. எனவே, தகுதி உடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா துறை சம்பந்தமான தொழில்முனைவோர், சுற்றுலா விருது பெற 26-8-2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, இலங்கையை சார்ந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, மீனவர்கள் படகின் மீது ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், மீனவர்கள் படகில் இருந்த ஜிபிஎஸ், மீன்கள் மற்றும் செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம், முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. மேலும், விளையாட்டு போட்டிகளில் 12 முதல் 25 வயது வரை உள்ளவர் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் கலந்து கொள்ள sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 25-ந் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என நாகை கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் பாலமுரளி தலைமையில் நாகை டாடா நகர் சமுதாயக்கூடம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னால் மீனவர் அணி செயலாளர் செல்வம் நாட்டார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை புழலில் உள்ள மத்திய சிறைச்சாலையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கே.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையிலான பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷாநவாஸ், காஞ்சிபுரம் எம்எல்ஏ உறுப்பினர் எழிலரசன், பெரம்பூர் எம்எல்ஏ சேகர் , போரூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.